குட் நைட் – திரை விமர்சனம்

குட் நைட் – திரை விமர்சனம்

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி படங்கள் என்றாலே  தரமான படமாகத் தான் இருக்கும் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது குட் நைட்.

இயல்பு மீறாத கதையோட்டம், சிரிக்க – ரசிக்க வைக்கும் காட்சிகள், கவர்ச்சி – மசாலா இல்லாத திரைக்கதை என, திரை ரசிகர்களுக்கு மிகச் சிறந்த விருந்தாக அமைந்திருக்கிறது, குட் நைட் திரைப்படம்.  நாயகன் மணிகண்டன் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.  விதவையான அம்மா, ஒரு அக்கா ஒரு தங்கை அக்கா கணவன் ரமேஷ் திலக் இவருடன் மகிழ்ச்சியாக  வாழ்ந்து வருகிறார்.

ஆனால் இவரது குறட்டைதான் இவருக்குப் பிரச்சினை. அலுவலகத்திலேயே “மோட்டார் மோகன்” என பட்டப் பெயர் வைத்துவிடுகிறார்கள். இவர் தூங்கப்போகிறார் என்றாலே குடும்பத்தினர் அலறுகிறார்கள். அப்படி ஒரு பிரச்சினை.

இதனால் காதலும் முறிகிறது.

 

மீண்டும் அவருக்கு ஒரு காதல்  ஏற்பட்டு திருமணத்தில் முடிகிறது.  இவரது குறட்டையை சகித்துக் கொண்டு வாழும் அந்த பெண்ணுக்கு இரவெல்லாம் தூக்கம் போய் உடல் நலம் பாதிக்கிறது.

தன்னால் மனைவிக்கு பாதிப்பாகிறதே என குறட்டையை நிறுத்த ஏதேதோ முயற்சி செய்கிறார் நாயகன். அது நிறைவேறாமல் போகவே ஏகத்துக்கு டென்சன் ஆகிறார். இதனால் இருவரும் பிரியும் சூழல் ஏற்படுகிறது.

அதன் பிறகு என்ன ஆகிறது என்பதுதான் கதை.

 

நாயகன் மோகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மணிகண்டன் படத்தை முழுவதும் தாங்கி பிடித்து இருக்கிறார். காதல், பிரிந்தவுடன் சோகம், உயரதிகாரி திட்டும் போது சகித்துக்கொண்டு பிறகு பொருமுவது, மனைவிக்கு தன்னால் பிரச்சினை என ஆதங்கப்படுவது.. அசத்துகிறார் மனிதர்.

நாயகி நீதா ரகுநாதும் தன் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார். கணவனின் குறட்டையை பொறுத்துக்கொண்டு வாழ்ந்து, அதன் துயரை கண்களிலேயே காட்டுகிறார்.

ஒவ்வொருமே அற்புதமாக நடித்து இருக்கின்றனர். ஒளிப்பதிவு, இசை.. படத்துக்கு பலம்.

இயக்குனர் விநாயகர் சந்திரசேகர், வாழ்வில் நடக்கும் சாதாரண விசயத்தை அற்புதமாக இயல்பாக சொல்லி இருக்கிறார். அந்த இயல்பான விசயத்தின் ஊடே வாழ்க்கைக்கான சில விசயங்களையும் படிப்பினையையும் சிறப்பாக விவரித்திருக்கிறார்.

மொத்தத்தில் குட் நைட், ஒரு குட் பீல் முவீ!

 

Related Posts