கொரோனாவால் செத்துப் போன மனிதம்..! ஒரு மருத்துவரின் கண்ணீர்…!

சென்னை; நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக  கடந்த 19ம் தேதி ஞாயிற்று கிழமையன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரைப் பற்றி இந்த மாதம் முதல் வாரத்தில் கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவருக்கு இந்த வைரஸ் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை.

அவரைப் பற்றி டாக்டர் பாக்யராஜ்

அவர் நரம்பியல் நிபுணர் என்பதால் சாதாரன உடல் உபாதைகளுக்கு மருத்துவம் பார்ப்பதில்லை.

மேலும் அவர் சமீபத்தில் வெளிநாடு ஏதும் செல்லல வில்லை. மார்ச் மாதத் துவக்கத்தில் அவர் கொல்கத்தா மட்டுமே சைமன் சென்றுவந்தார்.  ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்., அவரது உடல் இரவு 9 மணிக்கு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

அவர்களது முறைப்படி அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் டிபி சத்திரம் கல்லறைத் தோட்டத்தில் அனுமதி பெற்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.  நாங்கள் பேசிக்கொண்டிருந்த போது  அந்த இடத்தில் ஆட்கள் குவிந்துவிட்டார்கள் எங்களை புதைக்க விடவில்லை.

அதன் பிறகு அண்ணாநகர் பகுதியில் இருக்கும்  வேலங்காடு இடுகாட்டில் சைமனின் உடலைப் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சைமனின் உடலுடன் அவரது மனைவி, மகன், பிரதீப் உள்ளிட்ட சில மருத்துவர்கள், மாநகராட்சி அதிகாரிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆகியோர் இருந்தார்கள்.

உடலை “12 அடி ஆழத்தில் புதைக்க வேண்டும்.  அதற்காக ஜேசிபியை வைத்து பள்ளம் தோண்ட ஆரம்பித்திருந்தோம். 15 நிமிடம்கூட ஆகியிருக்காது. சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கையில் கற்களையும் கட்டைகளால் எங்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். எங்களுடன் இருந்த சுகாதார ஆய்வாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் என எல்லோருமே தாக்கப்பட்டோம்” என கண்ணீருடன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் டாக்டர் பாக்யராஜ்.

இந்தத் தாக்குதலில் அவரது உடலை ஏற்றிவந்த ஆம்புலன்ஸ் நொறுக்கப்பட்டு ஓட்டுநர்களுக்கு ரத்த காயம்’ சைமனின் குடும்பத்தினரும் தாக்கப்பட்டார்கள். பயத்தில்  அங்கிருந்த மாநகராட்சி ஊழியர்கள் வேறு வழியில்லாமல் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டனர்.

மருத்துவர் சைமனின் உடலைவிட்டுவிட்டு, எல்லோருமே ஓடிவிட்ட நிலையில் டாக்டர் பிரதீப் ஆம்புலன்ஸ் டிரைவர்களின் உதவியுடன் மீண்டும் ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

ஓட்டுநர்களுக்கு ரத்தகாயம் என்பதால் அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.

பிறகு நாங்கள் சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகளைத் தொடர்புகொண்டோம். அதன் பிறகு , காவல்துறையினர் உதவிவியுடன்’’அடக்கம் செய்தோம்.

மருத்துவர்கள் கொரோனாவால் இறந்து போனால் இதுதான் நிலைமையா?
எங்களை கல்லால அடிச்சு… பிணத்தை அப்படியே கீழே போட்டு… உங்களுக்காக உழைக்கும் எங்களுக்கு மக்கள் கொடுக்கும் பரிசு இதுவா?” – ஒரு தமிழக மருத்துவரின் கண்ணீர்  பதிவு.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த பிரசனை புதிதல்ல ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நெல்லூரைச் சேர்ந்த மருத்துவர் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தாபோது மருந்த்துவரின் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அந்த சூழ்நிலையில்  மாநகராட்சி அதிகாரிகள் உடலை அடக்கம் செய்ய அம்பத்தூர் மயானத்திற்கு எடுத்துச் சென்றபோது, அங்கிருந்தவர்கள் அவர்களை முற்றுகையிட்டு தாக்க முயன்றபோது  உடலை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து சென்றனர். இவ்வாறு தொடர்ந்து மக்கள் மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்வது வேதனை.

உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்களுக்கு இப்படி ஒரு நிலைமை என்றால் சாதாரன மக்கள்?

மருத்துவர் இல்லை என்றால் யாரையும் இங்கு காப்பாற்ற முடியாது. தனது உயிரை பணயம் வைத்து பல உயிர்களை காக்கும் மருத்துவருக்கும் நாம் செய்யும் நன்றிக்கடன் இதுதானா.