யாழ்பாணத்தில் கொரோனா தொற்று…! மறுக்கும்  மத போதகர்…!

உலகை அச்சுருத்தும் கொரோனா வைரஸ் பாதிக்கபடாத நாடுகள் மிகவும் குறைவு. எல்லா நாடுகளையும் தனது வட்டத்துக்குள் கொண்டு வந்துள்ளது இந்த கொடுர வைரஸ். இலங்கை யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவுவதற்கு காரணமானவராக சுவிஸ் போதகரைச்  சொல்லப்பட்டது.

ஆனால் அதனை மறுத்து அதற்கு விளக்கம் அழித்துள்ளார் போதகர்.

சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகர் ஒருவர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட அரியாலைப் பகுதியில் வசிக்கும் மக்கள்.  இங்குதான் முதல் தொற்று கட்டறியப்பட்டது.

இது சம்பந்தமாக சுகாதாரத் துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கருத்து வெளியிட்டிருந்த சூழ்நிலையில் இந்த குற்றச்சாட்டினை முழுவதுமாக மறுத்துள்ளார் சுவிஸ் போதகர்.

  மேலும் அவர் “கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நானும் எனது சபைச்சேர்ந்தவர்களும் இலங்கைக்கு வந்து போகிறோம். நானும் எனது சபையைச் சேர்ந்தவர்களும் இலங்கை மக்களை அதிகமாக நேசிக்கிறோம். 

நாங்கள் இந்த மக்களுக்காக எவ்வளவோ பிரார்த்தனைகளை செய்திருக்கிறோம். நானும் எனது மனைவியும் கடந்த மார்ச் மாதம் பத்தாம் தேதி  கொழும்பு விமான நிலையத்தில் வந்து இறங்கினோம்.

நாங்கள் பரிசோதனை வழியாகத்தான் சென்றோம் அப்போது எங்களுக்கு எந்த நோயும் இல்லை. மார்ச் மாதம் 15ஆம் தேதி ஞாயிற்றுகிழமை நாங்கள் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டும் மற்றும் வழிப்பாட்டு தலங்களிலும்,சபைகளிலும் வழிபாடு நடத்தினோம்.

அங்கு நாங்கள் பிராத்தனையை சாதாரணமாகத்தான் நடத்தினோம் விளம்பரம் செய்யவில்லை,கூட்டத்தையும் சேர்க்கவில்லை.

அங்கிருக்கும் சிலர் மட்டுமே வந்திருந்தனர். பிராத்தனை முடிந்தவுடன் அவர்கள் சென்றபின் நாங்கள் கொழும்புக்கு சென்று விட்டோம் தொற்றுக்கு நாங்கள் எப்படி காரணமாக முடியும் எனக் கூறியுள்ளார். கொரோனா தொற்று போதகருக்கு ஏற்பட்டு குணமடந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.