ரேகை: வெப் சீரிஸ் விமர்சனம்

ரேகை: வெப் சீரிஸ் விமர்சனம்

ராஜேஷ்குமார் எழுதிய கதையை தினகரன் இயக்க,  zee5  ஓ.டி.டி.யில் வெளியாகி இருக்கும் தொடர், ரேகை.

தென்காசி மாவட்டத்திலுள்ள  நான்கு இளைஞர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். அவர்களது கைரேகை அனைத்தும் ஒரே மாதிரி இருக்கின்றன. அதுவும் உயிருள்ள ஒருவரின் கைரேகை.

இந்த பரபரப்பான முடிச்சைஅவிழ்ப்பதுதான், சுவாரஸ்யமான ரேகை வெப் தொடர்.

வழக்கை துப்பறியும் காவல் இன்ஸ்பெக்டராக பாலஹாசன் நடித்து இருக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார். வினோதினி வைத்யநாதன் இதுவரை நடிக்காத புதிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். வழக்கம்போல இயல்பான – மிரட்டும் நடிப்பு.

பவித்ரா ஜனனி, கிச்சா உள்பட ஏனைய கேரக்டர்களும் அசத்தியுள்ளனர்

சிக்கனமான ஷாட்ஸ்களை கூட பிரம்மாண்டமாக்க முயற்சித்துள்ளார் கேமராமேன். பின்னணி இசையில் பெரிய அழுத்தமில்லை என்றாலும் பெரியளவில் குறையுமில்லை..ஷார்ப்பான எடிட்டிங் இந்த சீரிஸுக்கு நல்ல அம்சத்தை சேர்த்துள்ளது

ராஜேஷ்குமார் கதைகள் என்றாலே திருப்பங்கள் நிறைந்தது. அதை இந்த சீரிஸின் திரைக்கதையிலும் காண முடிகிறது. யூகிக்க முடியாத பல காட்சிகள் அட போட வைக்கின்றன. பெரும் பதட்டத்தை ஏற்படுத்தும் கதை, ஒவ்வொரு எபிசோட் முடிவிலும் ஏற்படுத்தும் அதிர்வு, இயல்பான நடிப்பு என கவர்கிறது ரேகை.

 ரேட்டிங்:  4.1/5
 

Related Posts