அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுயில்.. 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்..!
காணும் பொங்கலான இன்று ஜல்லிக்கட்டு நடந்ததை அடுத்து 16 காளைகளை அடக்கி சாதனை படைத்துள்ளார் இளைஞர் ஒருவர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி மாலை 5 மணி வரை நடபெற்றது. போட்டியில் 688 மாடுபிடி வீரர்களும், 739 காளைகள் பங்கேற்றது. தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளிலேயே அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுகள் உள்நாடுமட்டும் அல்லாது’ வெளிநாட்டில் இருந்தும் வருவது வழக்கம்.
இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தான் ரஞ்சித் குமார் என்ற இளைஞர் சுற்றி சுற்றி காளைகளை பிடித்து அடக்கினார். மற்ற வீரர்கள் தொடக்கூட பயந்த காளைகளை இவர் அசால்டாக அடக்கினார்.
ரஞ்சித் குமார் மொத்தம் 16 காளைகளை அடக்கினார். இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.. இது மட்டும் அல்லாது ஒவ்வொரு காளைகளை அடக்கியதற்கும் தனித் தனியாக பரிசு வழங்கப்பட்டன.
தங்கம், குளிர்சாதன பெட்டி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் இவருக்கு பரிசளிக்கப்பட்டது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இவர் புதிய ரெக்கார்ட் என்று கூறப்படுகிறது.
இதேபோல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாவது இடத்தை 14 காளைகளை அடக்கிய கார்த்திக்கு வழங்கப்பட்டது. மேலும், 13 காளைகளை அடக்கிய கணேசன் 3வது பரிசு வென்றார். இதைப்போல் இன்னும் பல வீரர்கள் 10 காளைகளை இந்த போட்டியில் அடக்கினார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.