பாகுபலி “ரிபெல் ஸ்டார்” பிரபாஸின் அடுத்த பிரமாண்டம்..!
இந்தியா முழுதும் திரும்பிப்பார்க்க வைத்து வெற்றியைக் கொடுத்த “பாகுபலி”, “சஹோ” படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் தன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில் பெயர் வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 17 நேற்று முதல் துவங்கவுள்ளது. “ரிபெல் ஸ்டார்” பிரபாஸின் ரசிகர்கள் இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.
கோபி கிருஷ்ணா மூவிஸ் தெலுங்கு திரையுலகின் மாரியாதைக்குரிய, மிகப்பெரும் நிறுவனம் ஆகும். பழபெரும் நடிகர் ஶ்ரீ கிருஷ்ணம் ராஜு இப்படத்தினை தனது மேற்பார்வையில் வழங்குகிறார். மிகப்பெரும் பட்ஜெட்டில் இந்தியா முழுமைக்குமான படைப்பாக, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகிறது.
மேலும் இந்தப்படம் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படவுள்ளது. கோபி கிருஷ்ணா மூவிஸ் நிறுவனம் UV Creations நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். ஸ்டைலீஷ் ஆக்ஷன் திரில்லரான “ஜில்” படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர்
ராதா கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்காக பிரமாண்டமான அரங்கம் அன்னபூர்னா ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடிக்க பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.