‘ராஜா கிளி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

‘ராஜா கிளி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’  சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நடிகர் தம்பி ராமையா கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைக்க, உமாபதி ராமையா இயக்கும் படம், ‘ராஜா கிளி.

நாயகனாக சமுத்திரக்கனியும், நாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், சுபா  ஆகியோரும் நடிக்கின்றனர்.முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், அருள்தாஸ், சுபா உள்ளிட்டோர் தோன்றுகின்றனர்.

சாய் தினேஷ் பின்னணி இசை அமைக்க கோபிநாத் & கேதார்நாத் இரட்டையர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

அதிரடி சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா  அமைக்க,    கலக்கலான நடனக் காட்சிகளை சாண்டி & பிருந்தா இரட்டையர்கள் உருவாக்கி உள்ளனர்.முதன் முதலாக இசை அமைப்பாளராக இப்படத்தில் அறிமுகமாகிறார் தம்பி ராமையா. மேலும், சாட்டை, அப்பா, வினோதய சித்தம் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனியுடன் இப்படத்தில் இணைகிறார்.

இந்நிலையில் படத்துக்கு யு/ஏ  சான்றிதழ் கிடைத்துள்ளது.

“படத்தின் டிரைலர், இசை வெளியீடு மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related Posts