“ரஜினி வழி”யில் களம் இறங்குகிறார் ராகவா லாரனஸ்!
“குரு சேவை” என்ற தலைப்பில் நேற்று, நடிகர் ராகவா லாரனஸ் வெளியிட்ட அறிக்கை:
“உங்களுக்கு தெரியும். என் தலைவரை போலவே எனக்கும் எந்த தேவையும் கிடையாது. எனக்கு அரசியல் தெரியாது. எந்த கட்சிக்கும் எதிரி கிடையாது.
குரு ஒரு வழி காட்டியிருக்கிறார். அவர் வழி நடப்பதும், அந்த பாதையை பலப்படுத்துவதும் என் கடமை.
கடமையை நிறைவேற்ற நாளை முதல் களமிறங்குகிறேன். மாற்றம் நம்மில் இருந்து துவங்கட்டும். இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல!!”
– இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் லாரன்ஸ்.
களத்தில் இறங்கி என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை.