petta rap: அதிரடி ஆக்சன், செண்டிமெண்ட் என கலக்கும் டிரெய்லர்!

petta rap: அதிரடி ஆக்சன், செண்டிமெண்ட் என கலக்கும் டிரெய்லர்!

எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம், ‘பேட்ட ராப்’. இதில் வேதிகா நாயகியாக நடித்துள்ளனர். ரியாஸ்கான், மைம் கோபி, பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உட்பட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ப்ளு ஹில் பிலிம்ஸ் சார்பில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சன்னிலியோன் ஒரு பாடலுக்கு பிரபுதேவாவுடன் நடனமாடியுள்ளார். இந்தப் படம் செப்.27-ல் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

இந்நிலையில்,  படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

“காட்டுல யானை இருக்கும், சிங்கமும் இருக்கும். ஆனா புலி வரும்போது காடே சைலண்ட் ஆகிடும்” என்ற பஞ்ச் வசனத்துடன் ட்ரெய்லர் துவங்குகிறது.

திரைப்பட நாயகனாக வேண்டும் என்று நாயகன் போராடுவதே கதை என்பது டிரெய்லர் பார்க்கும்போது புரிகிறது. தவிர,  அதிரடி சண்டை்க காட்சிகள்,  சென்டிமென்ட் காட்சிகளும் உள்ளன.  மொத்தத்தில் ரசிகர்களை கவரும் விதத்தில் உள்ளது டிரெய்லர்.

 ட்ரெய்லர் வீடியோ:

Petta Rap Official Movie Traile

 

Related Posts