வெயில் காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பதநீர்!
பதநீர் என்பது பனைமரத்தில் இருந்து நுங்குக்கு முன் பூம்பாளையிலிருந்து கிடைக்கூடிய ஒரு பானம். இந்த பானம் அதிகாலையில் பனைமரத்திலிருந்து இறக்கப்படுகிறது. இந்த பானம் உடல் சார்ந்த வியாதிகளுக்கும், வெயில் காலத்தில் உடல் சூட்டை தனிக்கவும் பயன்படுகிறது.
நமது உடலில் ஏற்படக்கூடிய பல்வெறு பிரச்னைகளுக்கு தீர்வாகவும் இருக்கிறது.
பதநீர் சத்துக்கள்;
- ஒருகுவளை ( 250 மிலி ) பதநீரில் உள்ள சத்துகள்
- சக்கரை 28 .8 கிராம்
- காரம் 7 .௨ கிராம்
- சுண்ணாம்பு சத்து 35 .4 மி.கிராம்
- இரும்பு சத்து 5 .5 மி.கிராம்
- பாசுபரசு 32 .4 மி.கிராம்
- தயமின் 82 .3 மி.கிராம்,
- ரிபோபிலவின் 44 .5 மி.கிராம்
- அசுகர்பிக் அமிலம் 12 .2 மி.கிராம்,
- நிகோடினிக் அமிலம் 674 .1 மி.கிராம்
- புரதம் 49 .7 மி.கிராம்,
- கலோரிகள் 113 .3 மி.கிராம்
மாதவிடாய் பிரச்னை;
பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்னை சரிசெய்யவும் கருப்பை சார்ந்த வலி, வாய்வு, காட்டி முதலியவற்றையும்’ பெண்கள் இந்த காலத்தில் மார்பகம் வலி,.இடுப்பு வலி ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வாக உள்ளது.
இல்லற வாழ்க்கை;
பதநீர் திருமணமான தம்பதிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகும் காதல் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட வைக்கவும்,, இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும் உதவுசெய்கிறது..
உடல் சூடு
கோடையில் நமது உடல் வெயிலின் தாக்கத்தால் நீர் இழப்பு ஏற்பட்டு தோல் வறட்சி, சோர்வு, உஷ்ணம் அதிகரித்தல் ஆகியவை ஏறபடும். இந்த காலகட்டத்தில் கிடைக்க கூடிய பதநீர் குளிர்ச்சியானது. எனவே இப்பதநீரைக் குடிப்பதால், உடல் உஷ்ணம் குறைந்து வறட்சி நீங்கும்.
மலச்சிக்கல்
உடல் வறட்சி அடைவதால் மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், பதநீரைக் குடித்தால், அதில் உள்ள நார்ச்சத்துக்களால் குடலியக்கம் சீராக கிடைத்து, மலச்சிக்கல் நீங்கும். மற்றும் வயிற்றுப் புண் இருந்தாலும் குணமாகும்.
ஆரோக்கியமான பற்கள்
பதநீரில் இருக்ககூடிய கால்சியம் எழும்புகள், பற்களை வலிமைப்படுத்தி, ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டாலும் அதனைத் தடுக்கும்.
பதநீரின் இரும்புச்சத்து உடலில் உள்ள பித்தத்தைக் குறைத்து, இரத்த சோகையையும் கட்டுப்படுத்தும். இயற்கையாக மூன்று மாதம் மட்டுமே கிடைக்க கூடிய பதநீர் குடிப்பதால் வருடம் முழுவது நமது உடம்பை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளலாம்.