ஐந்து மொழியில் உருவாகும் பிரமாண்ட திரைப்படம்!

அழுத்தமான கதை பிரமாண்டமாக உருவாகும் படம் ‘’அஹம் பிரம்மாஸ்மி.’’ இப்படத்தின் துவக்க விழா பிரபலங்கள் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது.  மெகா பவர் ஸ்டார் ராம்சரண்  விருந்தினராக கலந்து கொண்டு கைதட்டல் நடுவில் பேபி நிர்வாணா இயக்க  படப்பிடிப்பு  துவக்கப்பட்டது.

 தெலுங்கு சினிமாவின் பிரபல ஆளுமையான மோகன் பாபு, பருசேரி கோபாலகிருஷ்ணா திரைக்கதை பிரதியை படைப்பாளிகளிடம் தந்தனர். மஞ்சு லக்‌ஷ்மி, சுஷ்மிதா கோனிடேலா கேமாராவை இயக்க பேபி வித்யா நிர்வாணா முதல் ஷாட்டை இயக்கினார். கலந்து கொண்ட அனைவரும் படம் சிறப்பாக வர படக்குழுவை வாழ்த்தினர்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழி என ஐந்து மொழிகளில் உருவாகிறது.

இயக்கம்; ஸ்ரீகாந்த் ரெட்டி

நடிகர்கள்;

மஞ்சு மனோஜ்
ப்ரியா பவானி சங்கர்
தனிகேல்லா பரணி
முரளி கிருஷ்ணா
சமுத்திரகனி

ஐஸ்வர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை,திரைக்கதை,வசனம், இயக்கம் –  ஶ்ரீகாந்த் N ரெட்டி

இசை – அச்சு ராஜாமணி, ரமேஷ் தமிழ்மணி

ஒளிப்பதிவு – சன்னி குருபாதி

பாடல்கள் – ராமஜோகய்யா சாஸ்த்ரி மற்றும் ஆனந்த் ஶ்ரீராம்

படத்தொகுப்பு – தம்மிராஜு

கலை இயக்கம் – விவேக் AM

சண்டைப்பயிற்சி இயக்கம் –  பீட்டர் ஹெய்ன்

நடிகை ப்ரியா பவானி சங்கர் இப்படத்தில் மஞ்சு மனோஜ் ஜோடியாக நடிக்கிறார்.

சமீபத்தில்  வெளியான  இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் விபூதி அணிந்து வித்தியாச தோற்றத்தில்  நகைப்பு, ரௌத்திரம், அமைதி என மூன்று பாவங்களை வெளிப்படுத்தும் மஞ்சு மனோஜின் தோற்றம் அனைவரையும் ஈர்த்து.

   இத்திரைப்படத்தை மஞ்சு மனோஜ் மற்றும் நிர்மலா தேவி MM Arts நிறுவனம் சார்பில் தயாரிக்க, வித்யா நிர்வாணா, மஞ்சு ஆனந்த் இப்படத்தினை வழங்குகிறது.

Related Posts