பிப்ரவரி 7 முதல் ZEE5-ல் ‘பராசக்தி’ தாண்டவம்!
தியேட்டர்கள அதிரவைத்த பொலிடிகல் ஆக்க்ஷன் அதிரடி திரைப்படம் ‘பராசக்தி’, இப்போ உங்க போன் ஸ்கிரீனுக்கே வருது!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, பெரும் இத் திரைப்படத்தை வரும் பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராக வெளியிடுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
1965-ல் தமிழ்நாட்டையே உலுக்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து, ரத்தமும் சதையுமாக ஒரு காவியத்தைப் படைத்திருக்கிறார் தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா. கொள்கை குன்றாக, ‘செழியன்’ என்ற துடிப்பான இளைஞனாக சிவகார்த்திகேயன் இதில் ஸ்கோர் செய்திருக்கிறார். போராட்டக்களத்தில் சிக்கிக்கொள்ளும் இரண்டு சகோதரர்களின் எமோஷனல் பயணமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஸ்ரீலீலா அமைதியான அதேசமயம் வலிமையான ‘ரத்னமாலா’ கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார்.
“இது சாதாரண மக்களோட அடையாளம் பற்றிய கதை; நம்ம குரலையும் வரலாற்றையும் ZEE5 உலகமெங்கும் கொண்டு செல்வது மகிழ்ச்சி” என இயக்குநர் சுதா கொங்கரா உற்சாகம் தெரிவித்துள்ளார். அதேபோல், “செழியன் கேரக்டர் என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானது; தைரியத்துக்கும் உண்மைக்கும் குரல் கொடுக்கும் இந்த அனுபவம் வேற லெவலில் இருக்கும்” என சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ஸ்ரீலீலாவும் இந்தப் படம் தனது கரியரில் ஒரு முக்கிய மைல்கல் எனப் பெருமிதம் கொள்கிறார்.
Dawn Pictures-ன் பிரம்மாண்ட தயாரிப்பில், சுதா கொங்கராவின் மிரட்டலான மேக்கிங்கில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ உங்களை இருக்கை நுனியில் உட்கார வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வரும் பிப்ரவரி 7, 2026 முதல் உங்கள் ZEE5 தளத்தில் இந்த அதிரடிப் போராட்டத்தைக் காணத் தயாராகுங்கள்!

