பராரி: விமர்சனம்

பராரி: விமர்சனம்

இயக்குநர் ராஜூ முருகன் வழங்க, எழில் பெரியவேடி இயக்கத்தில் ஹரி சங்கர், சங்கீதா கல்யாண், குரு, ராஜேந்திரன், மகேந்திரன், ப்ரேம்நாத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் பராரி.

இப்படத்தினை, கலா பிலிம்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட் சார்பில் ஹரி சங்கர் தயாரித்திருக்கிறர். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கிராமம். சாலையின் ஒருபுறம் ஆதிக்க சாதியினரும், மறுபுறம் பட்டியல் இனத்தவரும் வாழ்கின்றனர். சாதிக் கொடுமைகள் நடக்கின்றன.  இரு தரப்பு ஏழைகளும், வெளி மாநிலத்தில் கம்பெனியில் வேலைக்குச் செல்கின்றனர். அங்கு கன்னட வெறியர்களால் தாக்கப்படுகின்றனர். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

நாயகன் ஹரி சங்கர் சிறப்பாக நடித்து உள்ளார்.  ஆதிக்க சாதியினரின் நடவடிக்கைகளால் குமுறுவது… அதே நேரம் பிரச்சினைகளை தவிர்க்க நினைத்து தனது சாதியினரை அடக்குவது, கன்னட வெறியர்களின் செயலைக் கண்டு பொங்குவது என அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.நாயகி சங்கீதாவின் நடிப்பும் சிறப்பு.  காதலை நாயகன் ஏற்கத நிலையில் கோபத்தை வெளிப்படுத்துவது, கன்னட வெறியனை அறைவது போன்ற காட்சிகளை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அதே போல கிளைமாக்ஸ் காட்சியில் இருவருமே கண்கலங்க வைத்து விடுகிறார்கள்.

இதர கதாபாத்திரங்களில் நடித்துள்ள  குரு ராஜேந்திரன், மகேந்திரன், ப்ரேம்நாத் உள்ளிட்டோரும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது.  பொதுவாக ஆதிக்க சாதியினரை வசதி படைத்தவராகவே திரைப்படங்களில் காண்பிப்பார்கள். இதில் எதார்த்த நிலையை… அவர்களின் வரிய நிலையை காண்பித்து உள்ளனர்.

“எல்லாருமே கஸ்டப்படுறோம்.. இதுல எதுக்குடா ஜாதி வெறி” என்று கேட் வைக்கிறார் இயக்குநர்.

மொத்தத்தில் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

Related Posts