பரமசிவன் பாத்திமா: திரைப்பட விமர்சனம்

பரமசிவன் பாத்திமா: திரைப்பட விமர்சனம்

திண்டுக்கல் மாவட்டத்தில் சுப்பிரமணியபுரம் என்று ஒரு கிராமம். முழுமையாக இந்துக்கள் வசிக்கும் பகுதி.  அங்குள்ள மக்களில் கணிசமானோர், கிறிஸ்துவர்களாக மதம் மாறி பக்கத்தில் யாக்கோபுபுரத்தில் குடியேறுகிறார்கள்.

மதம் மாறாமல் சுப்பிரமணியபுரத்தில் வசிக்கும் நாயகன் பரமசிவன், அவனது உறவுப்பெண் மதம் மாறிய குடும்பத்தைச் சேர்ந்த – யாக்கோபுபுரத்தில் வசிக்கும் – நாயகி பாத்திமா.  மதம் மாறினாலும் மனதுக்குள் இந்து மத பற்றையும் நாயகனையும் வைத்து பூஜிக்கிறாள்.

இருவரும் திருமணம் செய்துகொள்ள தீர்மானிக்கிறார்கள்.   அதன் பிறகு அதிர வைக்கும் சம்பவம் நடக்கிறது.

பிறகு தொடர் கொலைகள். ஏன் அந்த கொலைகள் நடந்தன என்பதும, நாயகன் – நாயகிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் என்ன என்பதும் கதை.

நடிப்பு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

படத்தின் மூலம் இயக்குநர் சொல்ல வருவது, “வேலை, பணத்தாசை காண்பித்து இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றிவிடுகிறார்கள்” என்பதுதான்.

மதமாற்றத்துக்கு காரணமான சாதிவெறி பற்றி ஏதும் சொல்லவே இல்லை. தவிர, “குலசாமி” என சிவலிங்கத்தைக் காண்பிக்கிறார். இது சிறு தெய்வ வழிபாட்டை, பெரு தெய்வ வழிபாடாக மாற்றும் நுண் (ஆபத்து) அரசியல்.

ஆங்கிலேயர்கள் தங்கள் அதிகாரத்தாலும், கல்விப்பணியாலும் மதம் மாற்றினர் என்கிறார் இயக்குநர்.

இது குறித்தெல்லாம் விவாதம்தான் செய்ய வேண்டும்.

சுருக்கமாக இயக்குநரிடம் ஒரு கேள்வி:

“ஆண்டாண்டு காலமாக – பரம்பரை பரம்பரையாக வணங்கி வந்த கடவுளால் கேவலம், ஒரு வேலை வாங்கித் தர – பண வசதி ஏற்படுத்த முடியவில்லை. புதிதாக ஒரு கடவுள் வேலை, பணம் தருகிறது. அப்படியானால் இத்தனை ஆண்டுகாலம் வணங்கி வந்த கடவுளுக்கு என்னதான் மதிப்பு”

இப்படி இந்து மதத்தையே கேள்வி கேட்கும் காட்சிகளாக அமையும் என நினைத்தீர்களா.. இதை எப்படி எச்.ராஜா பாராட்டினார்…?

Related Posts