ரசிகர்களிடன் கவனம் பெற்ற பங்கஜ் த்ரிபாதியின் ’கடக் சிங்’ ட்ரெய்லர்

ரசிகர்களிடன் கவனம் பெற்ற பங்கஜ் த்ரிபாதியின் ’கடக் சிங்’ ட்ரெய்லர்

தேசிய விருது வென்ற இயக்குநர் அனிருத்தா ராய் சௌத்ரி இயக்கத்தில், பங்கஜ் த்ரிபாதி பார்வதி திருவோது, சஞ்சனா சாங்கி மற்றும் ஜெயா அஹ்சான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கடக் சிங்’. இப்படத்தின் ட்ரெய்லர் கோவாவில் நடைபெற்று வரும் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 8-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மறதி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார் பங்கஜ் திரிபாதி. பாதி நினைவுகளுடன் அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை விவரிக்கிறது இந்த படத்தின் கதை.

மேலும் அவர் பணிபுரியும் அலுவலகத்தில் நடந்த ஊழல் குற்றத்துக்கு பின்னால் இருக்கும் உண்மையை கண்டறிய முற்படுகிறார். இதனிடையே உறவுகள் குறித்தும் படம் பேசுவதை ட்ரெய்லர் உறுதி செய்கிறது. ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்ப்பார்வை ஏற்படுத்தி வருகிறது.

 

Related Posts