பசி இல்லாத உலகம் உருவாக்குவோம்….

பசி இல்லாத உலகம் உருவாக்குவோம்….
அக்டோபர் 16 உலக உணவு தினம்: 
உலகத்தில் வாழும் ஒவ்வொரு ஜீவனும்  உணவு இல்லாமல் உயிர் வாழ முடியாது. நாம் எந்த வேலை செய்தாலும், பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் அத்தனையும்  உணவுக்குள் அடங்கி விடுகிறது.
ஏழை, பணக்காரன் உண்ணும் விதம் வேறுபடலாம். ஆனால் உணவு எல்லோருக்கும் தேவை என்பது மட்டுமே உண்மை. பசி பொதுவான ஒன்று இயற்கையால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் உணவு அவசியம். உணவின் தேவை அதன் முக்கியத்துவம் ஆகியவற்றை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 16 ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது.
உலக முழுவதும் உள்ள உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியல் அவதிப்படும் மக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் இதன் நோக்கம்.
வாழ்க்கை முறை மாற்றத்தால் மாறிவரும் உணவுப் பழக்கம் அதனால் உண்டாகும் உடல்நலக் குறைபாடு மற்றும் வாழ்க்கை முறை போன்றவற்றை சுட்டிக்காட்டவே இந்த நாள் கொண்டாப்படுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் உணவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பசி, பட்டினியை எதிர்த்துப் போரிடவும் 1945 -ல் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு FAO இந்த நாளில் தான் உருவானது.
1979 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1981-ம் ஆண்டு முதல், உலக உணவு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
மேலும் உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள், ஏற்றுமதி , இறக்குமதி செய்யும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன் நோக்கம் விவசாயத்தை மையப்படுத்தியே  இருக்கும். விவசாயத்தை பாதுகாத்தல், இதில் முதலீடு செய்தால் மட்டுமே வருங்காலத்தில் உணவு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்பது தான் இதன் நோக்கம்.
உலக உணவு தினம் ஏன் கொண்டாடப் பட வேண்டும்?
 
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகில் 10 பேரில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை சந்திக்கின்றனர். 2022 ஆய்வின் படி 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் வளர்ச்சி குறைபாட்டுடன் இருப்பதாக கூறுகிறது.
இதற்கு காரணம் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு. அதை சரிசெய்யவும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் குறிக்கோளாகும்.
பசி,பட்டினியால் வாடும் மக்களை மீட்டெடுக்க ஒவ்வொருவரும் மனது வைத்தால் மட்டுமே முடியும். நமது தேவைக்கு அதிகமாக உணவுகளை வீண் செய்ய கூடாது என்ற நோக்கம் மனதில் வரவேண்டும்.
நமது வீட்டில் ஒரு நிகழ்ச்சி என்றால் அதில் உணவு கண்டிப்பாக மிஞ்சும் இந்த உணவுகளை வீண் செய்யாமல் இல்லாத மக்களுக்கு கொடுக்கலாம். எத்தனையோ அனாதை இல்லம், முதியோர் இல்லம் மற்றும் சாலைகளில் உணவுக்கு சுற்றித்திரிபவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர். ஆகவே உணவின் மகத்துவம் என்பது பசியை பற்றி அறிந்தவருக்கே தெரியும். அதனால் உணவை வீண் செய்யாமல் பசித்தவருக்கு கொடுத்து உதவுங்கள்.
உணவின் முக்கியத்துவத்தை வீட்டில் இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். உலக உணவு தினத்தில் ஒவ்வொரு ஆண்டின் போதும் ஒரு கருப்பொருள் உருவாக்கப்படும். இந்த ஆண்டின் கருப்பொருள் ‘உணவு பாதுகாப்பு’இதன் நோக்கம் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகும்.
1) விவசாயிகள் வருவாய் இழப்பில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பயிர் அல்லாத விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிக்க படுத்துவது.
2) கால்நடைகள் மற்றும் பயிர்களுக்கான காப்பீட்டுக் கொள்கைகள் மேம்படுத்துதல், மழை மற்றும் இயற்கைப் பேரிடர்களை தொடர்ந்து விரைவான நிவாரணம் வழங்குவதன் மூலம் துன்பத்தை குறைக்கலாம்.
3) ஒரே மாதிரியான விவசாய முறையை மாற்றி பல பயிர்களை ஊடுபயிராக வளர்க்க ஊக்கப்படுத்துதல் வேண்டும்.
4) வறட்சியைத் தாங்கும் விதை வகைகள் மற்றும் கரடுமுரடான தானியங்கள் போன்ற பூர்வீக விவசாயத்தை ஊக்குவிப்பது அவசியம்.
உணவு இல்லாமல் பூமியில் எந்த உயிர்களும் வாழ முடியாது  என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். க்டோபர்  16 உலக உணவு தினமான இன்று  உணவின் மகத்துவத்தை அறிந்து விவசாயத்தை ஊக்கப்படுத்தி வருங்கால உணவு தேவையை பாதுகாப்போம்.கிராமங்களில் விவசாயம் இல்லை என்றால் பகட்டான நகர வாழ்க்கை நரகமாகிவிடும் என்பதை உணர்ந்து செயல்படுவோம். விவசாயத்தை மதிப்போம் உயிர் காப்போம்.
யாழினி சோமு

Related Posts