ஓக்லாந்து: சீனு ராமசாமியின் கோழிப்பண்ணை செல்லதுரை: இன்னொரு சர்வதேச விருது!

ஓக்லாந்து: சீனு ராமசாமியின் கோழிப்பண்ணை செல்லதுரை: இன்னொரு சர்வதேச விருது!

தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை’ ‘மாமனிதன்’ ஆகிய வெற்றி படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் கடந்த ( 2024ம்) வருடம் வெளியானது, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம்.

இந்த படத்தில் யோகி பாபு, ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடித்தனர். இப்படத்திற்கு அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்தார்.

கிராமத்துக் கதைக்களத்தில் அண்ணன் – தங்கை உறவைப் பேசும் படமாக உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. “உறவுகளின் மேன்மையை, அன்பைச் சொல்லும் திரைப்படம்” என அனைவரும் பாராட்டினர்.

பிறகு சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. அதில் அகில இந்திய அளவில் ஆறாம் இடத்தைப் பெற்று சாதனை புரிந்து வருகிறது.

இதற்கிடையே, படத்துக்கு பல்வேறு, பன்னாட்டு திரைப்பட விருதுகள் கிடைத்தன, பல்வேறு பன்னாட்டு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.,

ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழா, ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் ஜிரோனா திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

அதே போல, ஜப்பானில் நடைபெற்ற 10 வது டாப் இண்டி திரைப்பட விருது எனும் பன்னாட்டு திரைப்பட விழாவில் கோழிப்பண்ணை செல்லதுரையில் நடித்த சத்யா தேவிக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. மேலும் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் எனும் விருதுகளுக்கு நாமினேஷன் என்ற தகுதியை பெற்றது. ஜப்பானில் நடைபெற்ற 10வது டாப் இண்டி திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருது. தஞ்சை சத்யாதேவிக்குக் கிடைத்தது. மேலும், அப்படம் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், இத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்த தஞ்சை சத்யா தேவிக்கு சிறந்த நடிகைக்கான சர்வதேச விருது , ஓக்லாண்ட் சர்வதேச திரைப்பட விழா 2024 வழங்கியது.

ஓக்லாந்து கலிபோர்னியாவில் தமிழ்ச் சங்க விழாவுக்கு சென்ற இயக்குனர் கவிஞர் சீனு ராமசாமி, ஓக்லாந்து சர்வதேச திரைப்பட விழா குழுவின் தலைவர் டேவிட்டை சந்தித்து செல்வி சத்யாதேவிக்கு சேர வேண்டிய விருது சான்றிதழையும் பெற்றுக் கொண்டார்.

அவருடன் திரை இசைப் பாடகர் மருத பாண்டியன், நடிகர் சிவா வேல்சாமி ஆகியோரும் இருந்தனர்.

இது குறித்து இயக்குநர் சீனு ராமசாமி, “மக்களுக்கான படம் என்றால் மக்கள் கொண்டாடுவதுடன், உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்பதை கோழிப்பண்ணை செல்லதுரை படமும் உணர்த்துகிறது. இது எனக்கு மனநிறைவை அளித்து உள்ளது” என்றார்.

 

Related Posts