பெ.மகேந்திரனின் ‘நிறைகுளம்’ நாவல் விமர்சனம்: எழுத்தாளர் எஸ்.ஏ.பெருமாள்

நிறைகுளம் நாவல் குறித்து எழுத்தாளர். எஸ்.ஏ.பெருமாள் அவர்களின் மதிப்புரை…
கரிசல் இலக்கியத்தில் ஒரு கரிசல் கிராமத்தின் உருவாக்கம் அதன் அன்றைய இன்றைய பிரச்னைகள்
மக்களின் வாழ்வு பற்றி எழுதும் ஒருமரபை பெரியவர் கி,ராஜநாராயணன் தனது கோபல்ல கிராமத்தில் துவக்கி வைத்தார். அந்நாவல்களில் நீண்டகாலமாய் தீர்க்கப்படாத பிரச்னைகளும் மீண்டும் பேசப்பட்டு ஆளுவோரின் தலையிட்டுக்காக எழுத்தாளர்களால் தொடரப்படும். நிறைகுளம் அத்தகையஒரு பிரச்னையை சுமந்து வருகிறது.
நிறைகுளத்தோடு தென்மாவட்டங்களையும் இணைத்து கம்யூனிஷ்ட் கட்சியாலும் விவசாயசங்கத்
தாலும் முன்வைத்து பிரிட்டிஷ் ஆட்சிமுதல் இன்று வரை அந்த அழகரணைத்திட்டம் நிறைவேறாத கனவாகிப்
போனது.அதை இந்தத்தலைமுறையின் ராமகிருஷ்ணன் கிளப்பி அதை இயக்கமாக்க முயற்சிக்கிறான்.
நாவலின் இந்த மையச்சரடை நோக்கி நிறைகுளம் ததும்பி நிற்கிறது.தனுஷ்கோடி புயலில் அடிபட்டு இங்குவந்த குடியேறிய தந்தை மகன், கிராமப்பெரியமனிதர்கள் நாவலில் சுவாரசியமாய் சித்தரிக்கபடுள்ளனர்,அழகரடி அணைக்காக சுற்றுவட்டார கிராமங்களை திரட்ட முயற்சிக்கும்போது கிராமத்து ரட்சகனாய் நம்பப்படும் விநாயரின் சிலை களவாடப்படுகிறது,அது உடனடியாய் தீர்க்கப்படவேண்டிய பிரச்னையாகிறது,
வடக்கிலிருந்து விநாயகரை தென்னாட்டுக்கு, திருட்டுத்தனமாக பிள்ளையார் சிலைகளைக்கடத்துவது ஒரு சடங்காக மாறியது . விநாயகர் சிலையை திருடிக்கொண்டுவந்து வைத்தால்தான் விசேசம் என்ற புளுகு கட்டி விடப்படுகிறது. நிறைகுளத்திற்கு ஒரு சிலை கடத்தி வரப்பட்டு பிரச்னையாகிறது,
1968 ம் ஆண்டில் ராஜபாளையம் விவசாயிகள் மாநாட்டில் அழகர் அணைத்திட்டம் பற்றிய தீர்மானத்தை நான் வாசித்தது நினைவுக்கு வருகிறது.
அறுபதாண்டுகளுக்கு முந்தைய கரிசல் நில மக்களின் வாழ்வை நாவல் கண்முன் நிறுத்துகிறது, இதில் ஆசிரியர் மகேந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.
ஏற்கெனவே மகேந்திரன் வெள்ளாமை என்ற தனது நாவலின் தொடர்ச்சியாகவே இதை எழுதியிருக்கிறார், கரிசல் மாவட்டங்களின் அழகரடி அணப் பிரச்னை தொடர்கிறது. கேரளத்திலிருந்து மேற்கு நோக்கி பாய்ந்து கடலில் வீணே கலக்கும் ஒரு ஆற்றைத்தான் கோருகிறது நாவல்,
முகவை, நெல்லை, துாத்துக்குடி விவசாயிகளின் பிரச்னை கிளப்ப வேண்டியுள்ளது, அண்மையில் பல ஆண்டுகளுக்குப் பின்பு அத்திக்கடவு அவினாசி கால்வாய் திட்டம் போல வர வாய்ப்புண்டு் அதற்கு முதலில் நாவலை வாசிக்கவேண்டும்.
கடந்த வெள்ளாமை நாவலைவிட இதில் குளம் நிறைந்திருக்கிறது. பொதுப்பிரச்னையில் தனிக்குடும்பங்களின் ஈடுபாடு நாவலில் பிரதிபலிக்கிறது .சாத்துாரப்பன் ராஜம்மாள் தம்பதிகள் வாழ்க்கை போன்ற பல செய்திகள் சுவையூட்டகின்றன,
முல்லைப்பெரியார் அணைகுறித்த சரியான தகவல் சுவாரசியமாய் கூறப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறும் மேற்குநோக்கிப் பாயும் ஆறுதான். அதை கிழக்கு நோக்கித் திருப்பியதில்தான் பொறியாளர் பென்னிகுக் திறமையை புதியதலைமுறை அறியமுடிகிறது.
கேரளம் வழியாக மேற்குநோக்கிப் பாயும் 16 ஆறுகளில் சிலவற்றையாவது தமிழகத்திற்குத் திருப்பினால் தமிழகத்தின் பஞ்சம் தீரும் என்ற கருத்தை ஆணித்தரமாக முன் வைக்கப்பட்டள்ளது.
அறுபதாண்டுகளுக்கு முந்திய தமிழர் வாழ்க்கை – தர்மச்சோறு எடுத்துப்போட்டு வழங்குதல், உட்பட நாவல் கூறுகிறது,
தனது மண்ணையும் மக்களையும் தனது படைப்பில் கொண்டுவருவதுஒருபடைப்பாளனின் கடமையாகும், அதை செவ்வனே நிறைவேற்றியுள்ளார், பெ,மகேந்திரன், பாராட்டுக்கள்.
—- எஸ். ஏ. பெருமாள்.
புத்தகம் பெற…
நிறைகுளம்.
பெ.மகேந்திரன்.
மின்னங்காடி பதிப்பகம்.
260 பக்கநாவல்,
விலைரு 300/-
தொடரபுக்கு:
72992 41264
,