ஆங்கில புத்தாண்டு நடுராத்திரியில் கோயிலைத் திறக்கலாமா?

ங்கிலப் புத்தாண்டையொட்டி கோயில்களுக்கு நள்ளிரவில் சென்று கடவுளை பிரார்த்தனை செய்வது சமீபகாலமாக நடைமுறையில்  இருந்துவருகிறது. இது முற்றிலும் தவறான ஒரு பழக்கமாக மக்களிடையே இருந்து வருகிறது.

அர்த்தஜாம பூஜை முடித்து கோவிலின் நடைசாத்தி விட்டால், அதன் பிறகு கோயிலைத் திறக்கக் கூடாது என்பது ஜோதிட விதி.

ஜோதிட சாஸ்திரப்படியும் மறுநாள் சூரிய உதயம்தான் ஒரு நாளின் தொடக்கமாக எடுத்துக்கொள்ளப்படும். நள்ளிரவு பன்னிரண்டு மணி என்பது ஒருநாளின் முடிவு கிடையாது. எனவே, நள்ளிரவு நேரத்தில் கோவிலை திறப்பதும் அவசியம் இல்லை. நாகரீகம் என்ற பெயரில் நள்ளிரவில் தூங்காமல் கடவுளை வணங்குவதால் எந்த பலனும் இல்லை’’அவர்கள் காத்துகிடந்ததுதான் மிச்சம்.

ஆகம விதிப்படி நடைசாத்திய பிறகு  நள்ளிரவில் கோயிலைத் திறப்பது தவறு. சாஸ்திரசம்பிரதாயங்களுக்கு முரண்பட்ட செயலாகும். சூரிய உதயத்துக்குப் பிறகு இறைவனை வணங்கும் போது மட்டுமே முழு பலனும் கிடைக்கும். எனவே மக்களும் இதை புரிந்து கொண்டு தொன்றுதொட்டு வரகூடிய பலங்கால முறைப்படி கடவுளை வணங்குவதே சிறப்பு…

ஜோதிடர் கோதண்டன்