சினிமா விமர்சனம்: நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே 

சினிமா விமர்சனம்: நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே 

முக நூலில் பெண்களை வளைத்து தியேட்டருக்கு அழைத்துப் போய் கசமுசா செய்வதோடு அந்தப் பெண்ணின் தோழிகளை நண்பர்களுக்கும் கொடுக்கிற ஒரு மதுரை இளைஞன் ( செந்தூர் பாண்டியன்) அதே முகநூலில் உரையாடும் கும்பகோணத்துப் பெண் ஒருத்தியின் (பிரீத்தி கரன்) பிறந்த நாள் அன்று அவளே எதிர்பாராதபடி நேரில் சென்று அவளை ஆச்சர்யப்படுத்த, நண்பனோடு பைக்கில் காலையில் ஐந்து மணிக்கு மதுரையில் இருந்து கிளம்பி கும்பகோணம் வருகிறான் .எப்படியாவது அவளை கரெக்ட் செய்து அவளது பிறந்த நாள் அன்றே அவளை அனுபவிக்க அவன் திட்டமிட்டு முயற்சிக்க , அவளோடு அவளது தோழி ( பிக் பாஸ் பூர்ணிமா) அவளது தங்கை இருவரும் சேர்ந்து சந்திக்க, அதன் பின்னர் நடந்தது என்ன என்பதே படம் .
முக நூல் நட்புகள் நினைத்தது போல இருக்காது . நேர்மாறாகவும் இருக்கும் என்பதையும் , நட்போ காதலோ அல்லது ஜஸ்ட் லைக் சந்திப்போ அந்த சந்திப்பில் ஆண் சாதிக்க விரும்புவது என்ன ?

சந்திப்பை பெண் எப்படி பார்க்கிறாள் என்பதையும் சொல்லும் படம்.

சுவையான கதை. எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஆரமபித்துப் பறக்கிறது . பெரும்பாலான காட்சிகளில் இருவர் மட்டுமே. நீளமான ஷாட்கள் யதார்த்தமாக இருக்கின்றன .

ஒளிப்பதிவு, இசை படத்துக்கு பலம்.

அதே நேரம், 2 நிமிடங்களுக்கு சுய இன்பம் செய்யும் காட்சி, முன்பின் தெரியாத ஒரு பெண்ணைப் பார்க்கப் போகும்போதே காண்டம் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு போவது… போன்ற காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

 

 

 

Related Posts