“செருப்படி.. நிர்வாணம்…!”: ‘கொட்டுக்காளி’க்காக ‘ஆடி’த் தீர்த்த மிஷ்கின்!

“செருப்படி.. நிர்வாணம்…!”: ‘கொட்டுக்காளி’க்காக ‘ஆடி’த் தீர்த்த மிஷ்கின்!

” கொட்டுக்காளி படத்தை எடுத்து இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ்என்னை செருப்பால அடிச்சுட்டான்… இந்தப் படத்துக்காக நிர்வாணமா ஆடவும் தயார்” என்று ஏகத்துக்கு பேசி கவனத்தை ஈர்த்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க,  பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிக்கும் படம், ‘கொட்டுக்காளி’.  இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. நிகழ்வில், இயக்குநர்கள் வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், மிஷ்கின், ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மிஷ்கின் பேசும்போது, “பி.எஸ். வினோத்ராஜை ஆரம்பத்தில் பார்க்கும் போது, ‘கூழாங்கல் படத்தை பண்ணிட்டேன். அடுத்து கொட்டுக்காளி பண்றேன்’ என்றான். ‘யாரு மியூசிக் டைரக்டர்’ எனக் கேட்டதும், ‘யாருமே இல்லை’ என்றான்.

‘என்ன டேஷ் மாதிரி பேசுறான்’ என நினைத்துக் கொண்டு இருந்தேன்.

ஆனால், ‘கொட்டுக்காளி’ படத்தை பார்த்த பின்னர், வினோத் என்னை செருப்பால அடிச்ச மாதிரி அந்த படம் இருந்தது.

இளையராஜா காலில் விழுந்து முத்தமிட்டு இருக்கிறேன். அவருக்குப் பிறகு வினோத்தின் காலில் விழுந்து முத்தமிட தயாராக உள்ளேன். இந்த படத்தை புரமோட் செய்ய நிர்வாணமாக டான்ஸ் ஆட சொன்னால் கூட நான் ரெடி தான். ஆனால், நான் நிர்வாணமாக ஆடினால் யார் பார்க்க ரெடி ” என்றெல்லாம் பேசி அரங்கத்தையே அதிரவைத்தார் மிஷ்கின்.