மேடையில் பாடிய திருச்சி சிவா எம்.பி.! ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி. பரமேஷ் முப்பெரும் விழாவில் ருசிகரம்!

மேடையில் பாடிய திருச்சி சிவா எம்.பி.! ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி. பரமேஷ் முப்பெரும் விழாவில் ருசிகரம்!

“ஈழத்து மெல்லிசை மன்னர்” என போற்றப்படும் மூத்த இசையமைப்பாளர் எம்.பி. பரமேஸ், தனது தந்தை தமிழறிஞர் பீதாம்பரம் அவர்களது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக மறு பதிவு செய்துள்ளார். அவரது இந்த ஆக்கத்துக்காகவும், அவரது 60 வருட இசைப்பயணத்துக்காகவும் அவரது மகள் இசைவாரிசு பிரபாலினி பிரபாகரன் பாராட்டு நிகழ்ச்சியை இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தினார். பிரபாலினி இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் என்பது பெண்களுக்கே பெருமையுடைய விடயம். இந்த விழா 3 தலைமுறைகள் ஒன்று கூடுய ஒரு அற்புத் நிகழ்வாக அமைந்தது.இந்த முப்பெரும் விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் இயக்குநர் சீனு ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வில், திருச்சி சிவா (மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதாவது:

” நம் தொப்புள்கொடி உறவான ஈழத்து மண்ணிலிருந்து வந்து, இசை உலகையே தன் பக்கம் ஈர்த்த ஒரு மாமனிதரான எம்.பி. பரமேஷ் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழின் பெருமையையும், மெல்லிசையின் இனிமையையும் கட்டிக்காத்தவர். அவரது வரிகளும், குரல் வளமும் அவரது மெட்டுகளும் தொடாத இதயங்கள் இல்லை.

இன்று அவரது குடும்பம் இங்கே ஒன்றுகூடியிருப்பதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

அவர், 60 வருடகாலம் கலையுலகில், அதுவும் இசைத்துறையில் நிலைத்து நிற்பது என்பது சாதாரணமான காரியம் அல்ல; அது ஒரு தவம்.

எம்.பி. பரமேஷ் அவர்கள் இன்னும் நூறாண்டுகள் கடந்து தனது இசைச் சேவையைத் தொடர வேண்டும் ” என்றார்.

தனது இசையால் தன் காதலி சிவமாலினியின் மனதை களவெடுத்த கள்ளன் இந்த m.p. பரமேஷ் என்று புன்னகையுடன் சொன்னார்.

இந்த தம்பதிகளின் இசை வாரிசான மகள் பிரபாலினியின் பேச்சையும், பாடியதையும் சொல்லி பாராட்டினார், ஒவ்வொரு தாய் தந்தையினருங்கும் இப்படி ஒரு மகள் தேவை என்று பாராட்டினார்.

தொடர்ந்து இந்தித் திரைப்பட பாடல்களும் தனக்குப் பிடிக்கும் என்றார். கூட்டத்துக்கு வந்திருந்த பலர், அவரை இந்தி பாடல் பாடும்படி கூறினர்.

அவர், “தமிழர்களான நாம் கலை என்று வந்துவிட்டால் மொழி பார்ப்பதில்லை.
லதா மங்கேஸ்கர் உள்ளிட்ட இந்தி கலைஞர்களை நான் அங்கீகரிக்கிறோம். பாராட்டுகிறோம். ஆனால் நமது பி.சுசீலா என்கிற அற்புத பாடகியை அவர்கள் ஏற்பதில்லை” என்றார்.

தொடர்ந்து, கொடிமலர் படத்தில், எம்.எஸ்.வி. இசையில் .பி. சீனிவாஸ் பாடிய “மவுனமே பார்வையாய்..” என்ற பாடலை பாடி அசத்தினார் திருச்சி சிவா.

Related Posts