அதர்ஸ்: திரைவிமர்சனம்

அதர்ஸ்: திரைவிமர்சனம்

கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில்,  அபின் ஹரிஹரன் இயக்க,  ஆதித்ய மாதவன், கவுரிகிஷன், அஞ்சுகுரியன், முனிஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம், அதர்ஸ்.  இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு : அரவிந்த்சிங்

 

ஒரு வாகனம் விபத்துக்குள்ளாக, அது குறித்து விசாரணை நடத்துகிறார்  காவல் அதிகாரியான, நாயகன் ஆதித்ய மாதவன். இன்னொரு பக்கம், மருத்துவரான நாயகி கவுரி கிஷன் தான் பணிபுரியும் மருத்துவமனையில் நடக்கும் ஒரு முறைகேடு குறித்து கேள்வி எழுப்புகிறார்.

இந்த இரு விவகாரங்களும் ஒரு இடத்தில் சந்திக்கின்றன.

இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பானவை என்றும், இதன்  பின்னணியில் மிகப் ம பெரிய மெடிக்கல் கிரைம் இருப்பதும் தெரிய வருகிறது.

அந்த க்ரைம் என்ன.. அதை நாயகன், நாயகி முறியடித்தனரா என்பதுதான் கதை.

அறிமுக நாயகன் ஆதித்ய மாதவன் காவல் அதிகாரி கதாபாத்திரத்துக்கு சிறப்பாக அமைந்துவிட்டார்.  துப்பறிவதில் காட்டும் ஆர்வம், விசாரணையில் கோபம் என சோபிக்கிறார்.

இன்னொரு காவல் அதிகாரியாக வரும் அஞ்சு குரியன், போலீஸ் ஆக வரும் முனிஸ்காந்த் ஆகியோரும் இயல்பாக நடித்து உள்ளனர்.

காமெடியன் நண்டு ஜெகன்  எதிர்மறை கதாபாத்திரத்தில் வருகிறார். ஓகேதான்.  சிறிய கதாபாத்திரத்தில் வந்தாலும் சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்.

மூர்.. அற்புதமான நடிப்பு. அப்பாவி மெக்கானிக், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் என்றெல்லாம் முகம் காட்டி… இறுதியில் ஆவேசமாக வெளிப்படுவது… அசத்தல்.

துரத்தல் மற்றும் இறுதிக் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங்.  க்ரைம் த்ரில்லருக்கு ஏற்ற இசையை அளித்து இருக்கிறார் ஜிப்ரான்.

வெறும் க்ரைம் த்ரில்லராக இல்லாமல், சமுதாயத்துக்குத் தேவையான செய்தியையும் சொல்லி இருப்பது சிறப்பு.

ரேட்டிங்: 3.9/5

 

Related Posts