ஜீ 5 ஓ.டி.டி. தளத்தில் மீரா ஜாஸ்மினின் ‘குயின் எலிசபெத்’ வெளியீடு!
இயக்குர் பத்மகுமார் இயக்கத்தில் நரேன், மீரா ஜாஸ்மின் நடிக்கும் மலையாள படம் ‘குயின் எலிசபெத்’.
‘அச்சுவின்டே அம்மு’, ‘மின்னாமினிக்கூட்டம்’ படங்களுக்குப் பிறகு நரேனும் மீரா ஜாஸ்மினும் இணைந்து நடிக்கும் படம் இது. ஸ்வேதா மேனன், ரமேஷ் பிஷாரடி, வி.கே.பிரகாஷ், ஷியாம பிரசாத், ஜானி ஆண்டனி, மல்லிகா சுகுமாரன், ஜூட் அந்தனி ஜோசப் உள்ளிட்டோர் படத்தில் நடிக்கின்றனர். ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார்.நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீரா ஜாஸ்மின் கடந்த ஆண்டு வெளியான ‘மகள்’ மலையாள படம் மூலம் மீண்டும் திரையில் தோன்றினார். தற்போது இவரது நடிப்பில் குயின் எலிசபெத், ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.