மழை பிடிக்காத மனிதன்: திரைவிமர்சனம்

மழை பிடிக்காத மனிதன்: திரைவிமர்சனம்

நாயகன் விஜய் ஆண்டனி, சரத்குமார் ஆகியோர் இணைந்து ரகசிய ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில், விஜய் ஆண்டனி, தனக்கு பிடித்த பெண்ணை –  சரத்குமார் தங்கையை – காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

இதற்கிடையில், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட அமைச்சரின்  மகனை விஜய் ஆண்டனி  கொலை செய்ததால், அவரைப் பழிவாங்க  தாக்குதல் நடத்துகிறார் அமைச்சர்.  இதில் விஜய் ஆண்டனியின் மனைவி இறக்கிறார். சலீம் தப்பிக்கிறார்.

ஆனால் அந்த தாக்குதலில் விஜய் ஆண்டனியும் இறந்துவிட்டார் என்று சரத்குமார் அனைவரையும் நம்ப வைக்கிறார். பிறகு விஜய் ஆண்டனியை அந்தமானுக்கு அனுப்பி வைக்கிறார்.அந்தமானில் அடையாளமற்று வாழப் பழகுகிறார் விஜய் ஆண்டனி.  அங்கும் அவருக்கு சில பிரச்சினைகள் முளைக்கின்றன.

அவற்றை எப்படி எதிர்கொண்டார்..   விஜய் ஆண்டனி பழிக்குப் பழி வாங்கினாரா என்பதே மீதிக்கதை.

மனைவி கொல்லப்படும்போது மழை பெய்கிறது. ஆகவே எதிரிகளோடு சேர்த்து மழையையும் வெறுக்கிறார் விஜய் ஆண்டனி. தலைப்புக்குக் காரணம் இதுதான்.

விஜய் ஆண்டனி வழக்கமான தனது நடிப்பை அளித்து இருக்கிறார். அமைதியான முகத்தில் தேவைக்கேற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ஈர்க்கிறார். மனைவி கொல்லப்படும்போது வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் கவனத்தை ஈர்க்கின்றன. சண்டைக் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார்.

சரத்குமார், சத்யராஜ் ஆகியோருக்கு இயல்பான கதாபாத்திரம். எப்போதும்போல சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்கள்.நாயகி மெகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடிப்பும் நிறைவளிக்கிறது.

விஜய் ஆண்டனியின் நண்பராக வரும் பிருத்வி வில்லனாக வரும் தனஞ்சய் ஆகியோர் கவனத்தை கவர்கின்றனர்.விஜய் மில்டனின் ஒளிப்பதிவு(ம்) ஈர்க்கிறது. அச்சு ராஜாமணியுடன் இணைந்து இசை அமைத்து உள்ளார் விஜய் ஆன்டனி. பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. பின்னணி இசையும் சிறப்பு.வித்தியாசமான கதைக்களம், அதை சிறப்பாகக் கொண்டு செல்லும் திரைக்கதை என விஜய் மில்டன் இந்தப்படத்திலும் முத்திரை பதித்து இருக்கிறார். ஆக்சன் காட்சிளும் அதிரவைக்கின்றன. அந்தமான் தீவின் வீடுகள், தெருக்கள் வித்தியாசமான உணர்வினை ஏற்படுத்துகின்றன.

கெட்டவனை அழிக்க வேண்டாம்.. கெட்டதை அழிப்போம் என்கிற சிறப்பான கருத்தை சுவராஸ்யமாக கருத்தை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கும் விஜய் மில்லடன் பாராட்டுக்கு உரியவர்.மொத்தத்தில் படத்தை ரசித்துப் பார்க்கலாம்.