மே 29ல்… “பொன்மகள் வந்தாள்” வெளியீடு! அமெசான் ப்ரைம் ஓ.டிடி. தளத்தில்!
2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள “பொன்மகள் வந்தாள்” படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.
ஜே.ஜே ஃபெரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நாயகியாக நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஐந்து இயக்குநர்கள் நடித்துள்ளனர். சுப்பு பஞ்சுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஐந்து இயக்குநர்கள் நடித்திருப்பதாலும் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் ஜோதிகா கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதாலும் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது பொன்மகள் வந்தாள்.
கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு, ரூபன் எடிட்டிங், கலை இயக்கம் அமரன்.
படத்தின் இணைத் தயாரிப்பாளரும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் CEO-வும் ஆன ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன் “‘பொன்மகள் வந்தாள்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியான நாளில் இருந்து மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. மே 29ம் தேதி படம் அமேசான் ப்ரைம் இணையதளத்தில் வெளியாகும்!” என்றார்.
அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவின் கண்டன்ட் பிரிவின் இயக்குநரும் தலைவருமான விஜய் சுப்பிரமணியம், ” பல்வேறு மொழிகளில் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் ஏழு படங்களை வெளியிட உள்ளோம். ப்ரைம் வீடியோ, தற்போது இந்தியாவில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பினர்களுக்கு ஆண்டிற்கு வெறும் ரூ.999 அல்லது மாதம் ரூ.129 கட்டணத்தில் கிடைக்கப் பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/prime பார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30 நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்!” என தெரிவித்துள்ளார்.