அமேசான் ப்ரைம்: ஏழு திரைப்படங்களின் நட்சத்திர அணிவகுப்பு

ஜோதிகா நடித்துள்ள, “பொன்மகள் வந்தாள்” திரைப்படம் வரும் 29ம் தேதி அமேசான் ப்ரைம் ஓ.டி.டி.யில் நேரடியாக வெளியிடப்படுகிறது.

இது குறித்து அமேசான் ப்ரைம் நிறுவனத்தின்  இந்திய பிரிவின் இயக்குநரும் தலைவர் விஜய் சுப்பிரமணியம் தெரிவித்ததாவது:

“” அமிதாப் பச்சன் ( Black, Piku ) மற்றும் ஆயுஷ்மான் குரானா ( Shubh Mangal Zyaada Saavdhan, Andhadhun ) நடித்துள்ள ஷுஜித் சிர்காரின் (Shoojit Sircar ) “குலாபோ சிதாபோ” (Gulabo Sitabo ) வித்யாபாலன் ( Dirty Picture, Kahaani ) நடித்துள்ள  “சகுந்தலா தேவி” (Shakuntala Devi), ஜோதிகா நடித்துள்ள “பொன்மகள் வந்தாள்” மற்றும் கீர்த்தி சுரேஷ்  நடித்துள்ள “பென்குயின்” ( தமிழ் மற்றும் தெலுங்கு ) உட்பட ஏழு இந்திய மொழித்திரைப்படங்கள்  மே மாதத்தில் இருந்து  ஆகஸ்ட் மாதத்திற்குள் வரிசையாக அமேசான் பிரைமில்  வெளியிடப்பட இருக்கிறது.

ப்ரைம் வீடியோ, தற்போது இந்தியாவில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பினர்களுக்கு ஆண்டிற்கு வெறும் ரூ.999 அல்லது மாதம் ரூ.129 கட்டணத்தில் கிடைக்கப் பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/prime பார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30 நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்!” என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related Posts