வன அலுவலர் தேர்வு முடிவு: மனித நேய மாணவர் மூவர் வெற்றி

வன அலுவலர் தேர்வு முடிவு: மனித நேய மாணவர் மூவர் வெற்றி

இந்திய வன அலுவலர் பணிக்கான தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது அதன் முடிவுகள் நேற்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதில் மனித நேய மையத்தில் படித்த 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) 2024 –ம் ஆண்டுக்கான 150 இந்திய வன அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ந்தேதி வெளியிட்டது. இதன் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் டிசம்பர் 1 ஆம் தேதிவரை எழுத்து தேர்வுகள் நடைபெற்றன.இதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் 21-ந்தேதி முதல் கடந்த 2 –ந்தேதி வரை ஆளுமை தேர்வுகள் நடை பெற்றது.

நேர் முகத்தேர்வு முடிந்து இந்திய வன அலுவலர் பணிக்கு தேர்வான 143 பேர் கொண்ட பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டது. இதில் பொதுப்பிரிவில் 40 பேரும் பொருளாதாரத்தில் பிந்தங்கியவர்கள் 19 பேரும் இதர பிற்படுத்தப்பட்டோர் 50 பேரும், ஆதிதிராவிடர் 23 பேர், பழங்குடியினர் 11 பேர் என 143 பேர் தேர்வாகியுள்ளனர். மீதம் உள்ள பணியிடங்கள் பின்னர் நிரப்பப்படும் என்று தேர்வாணையம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வன அலுவலர் பணிக்கான தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடத்தை மாணவி கனிகா அனாப் பிடித்தார். கந்தேல்வால் ஆனந்த் அனில்குமார் 2 வது இடத்தையும், அனுபவ் சிங் 3 வது இடத்தையும் பிடித்தனர். குமரி மாவட்டத்தை சேர்ந்த ஜே.பி.பிஷா 88 –வது இடத்தையும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பி. பிளஸ்ஸி ஸ்ரீ ஜில் 110-வது இடத்தையும், சென்னையை சேர்ந்த பி. அருண் ஸ்ரீனிவாஸ் 125-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.இவர்கள் 3 பேர் பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதைதுரைசாமியை தலைவராக கொண்டு செயல்பட்டுவரும் மனிதநேய மையத்தில் படித்தவர்கள். முன்னதாக இந்திய வன அலுவலர் பணிக்கான முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மனிதநேய ஐ.ஏ.எஸ் கட்டணமில்லா பயிற்சிமையத்தில் நேர்முக தேர்விக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

பல்வேறு துறைகளை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஏ அண்டு ஐ.எஸ்,. உளவியல் பயிற்சியாளர்கள் மற்றும் பத்திரிகை துறையில் சிறந்த பயிற்றுனர்கள் மூலம் தினந்தோறும் மாதிரி நேமுக நேர்வுகள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.மனிதநேய மையத்தில் படித்த இந்திய வன அலுவலர் பணிக்கு தேர்வான ஜே.பி.பிஷா, பி.பிளஸ்ஸி ஸ்ரீஜில், பி.அருண் ஸ்ரீனிவாஸ் ஆகியோருக்கு மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Posts