மாண்புமிகு பறை: திரை விமர்சனம்
சியா புரடக் ஷன்ஸ் தயாரிக்க, எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில், லியோ சிவகுமார், காயத்ரி ரெமா, ஆர்யன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், மாண்புமிகு பறை.
ஒளிப்பதிவு : கொளஞ்சி குமார், இசை : தேவா
வெளியான தேதி : டிசம்பர் 12, 2025
நேரம் : 1 மணிநேரம் 49 நிமிடம்
சிறிய கிராமப்பபகுதியில், ஆதி பறை என்ற இசை குழுவை நடத்தி வருகிறார்கள் லியோ சிவகுமாரும், ஆர்யனும். பறையிசையை மிகவும் மதிக்கிறார்கள். லியோ சிவகுமார், காயத்ரி ரெமோவை காதலித்து மணம் புரிகிறார்.
இந்த நிலையில் சாதிவெறிக் கும்பல், ஆர்யனை கொலை செய்கிறது. லியோ சிவகுமாரையும் கொலை செய்ய முயற்சிக்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.
நாயகர்களாக தோன்றும் யோ சிவக்குமார், ஆர்யன் இருவருமே சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். பறையிசை மீதான காதல், அதற்கு இழிவு நேரும்போது கொள்ளும் ஆவேசம் என இயல்பாக நடித்து மனதைக் கவர்கிறார்கள்.
நாயகி காயத்ரி ரெமாவும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல் கணவன் மீது காட்டும் பாசம், அநீதி கண்டு கொள்ளும் ஆவேசம் என நிறைவான நடிப்பு.
நாயகியின் அப்பாவாக வரும் கஜராஜ், அம்மாவாக நடிக்கும் ரமா ஆகியோரும் கச்சிதம்.
இசை.. தேனிசைத் தென்றல் தேவா. இதில் அதிரடி பறையிசையில் ஈர்க்கிறார். கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறது.
பறை இசையின் தொன்மையை ஆரம்பத்தில் சொன்ன விதம் சிறப்பு, பறை இசைப்பவர்கள் படும் அவமானங்களை சொல்வதில் வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குநர் எஸ். விஜய் சுகுமார்.
அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங்: 3.9/5

