மாமன்னன்: உதயநிதியும் ஒரு குறியீடு?

மாமன்னன்: உதயநிதியும் ஒரு குறியீடு?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் திரைப்பம் கடந்த 29ம் தேதி வெளியானது. அவரது மற்ற படங்களைப் போலவி இதிலும் பல குறியீடுகள் உள்ளன. இந்த நிலையில்,  சமூக செயற்பாட்டாளரும் சித்த மருத்துவருமான சித்தர் கா. திருத்தணிகாசலம், படம் குறித்த தனது பார்வையை,  முகநூலில் பதிவிட்டு உள்ளார். இது பலரையும் கவர்ந்துள்ளது. அந்த விமர்சனம்:
 
“100 மாநாடுகள் 1000 அரசியல் பயலரங்குகள் செய்யக்கூடியதை ஒற்றை மாமன்னன் திரைப்படம் வச்சி செய்திருக்கிறது..
 
குறிஈடுகளால் நிரம்பிவழிகிறது மொத்த திரைப்படமும்..
 
பெரியாரை தலைவராகக்கொண்ட இருவண்ண கொடியுடைய திராவிட முதலமைச்சர் .
அந்த கட்சியின் மாவட்ட செயலாளர்தான் ஆதிக்க வெறிபிடித்த மாவட்ட செயலாளர் பாசில்
கட்சி பெரியார் கொள்கையை முன்னிறுத்தினாலும் அதன் மாவட்ட செயலாளர்கள் சாதி ஆதிக்க வெறிபிடித்தவர்களாகவும் அவர்களே சாதியத்தலைவர்களோடு கைகோர்த்துக்கொண்டு சாதிக்கலவரங்களுக்கு காரணமாக இருக்கிறார்கள் என்பதாக கதை போகிறது
தனக்கு அடுத்து தன் மகனை மாவட்ட செயலாளராக முன்னிறுத்துகிறார்கள்.
அந்த பெரியார் கட்சி மாவட்ட செயலாளருக்கும் அவருடைய சொல்லை வேதவாக்காக ஏற்று சேவகம் செய்யும் பட்டியலின கிளைச்செயலாளர் மாமன்னன் தலைநிமிர்வதே மொத்த கதை
மாவட்ட செயலாளர் முன்பு நின்றே பழக்கப்பட்ட மாமன்னன் அவர் முன்பு நாற்காலியில் உட்காரும் காட்சி சாதியைப்பற்றியோ தீண்டாமை ஒடுக்குமுறை பற்றியோ எதுவும் தெரியாத என் மகன் அறிவுப்பொழில் எழுந்துநின்று கைதட்டினான்
 
கமலகாசன் முன்பு இசைவெளியீட்டு விழாவில் மாரிசெல்வராஜ் பேசும் போது தேவர்மகனின் உள்ள இசக்கிதான் மாமன்னன் என்று கூறினார்
 
உண்மையில் அந்த பேச்சு கமலைநோக்கி பேசியது இல்லை
 
அதை படத்திலும் குறியீடாக வைத்திருக்கிறார்
 
அரசியல் காரணங்களுக்காக ஜெயலலிதா பட்டியலினத்தவர் தனபாலை சபாநாயகராக ஆக்கினார். தேவர்…  அதாவது ஆண்டவர் ஆள்பவர் மகனாகிய நீங்கள் பட்டியலினத்தவர் ஒருவரை முதல் அமைச்சராக்குங்கள் என்பதை வசனம் மூலம் கூறுகிறார்.
டீக்கடையில் தனி குவளைமுறை ஒழிந்திருந்தாலும் பட்டியலின தலைவருக்கு தனியாக நாற்காலி போட்டு அந்த தனிநாற்காலியில் அமரவைத்த சமகால அரசியல் நிகழ்வு வந்துபோகிறது ஒரு காட்சியில்
வடிவேலின் மாறுபட்ட நடிப்பு வடிவேல் குரலில் அந்த பாடல் .இனி பாடகராகவும் வடிவேல் ஒரு ரவுண்டு வருவார்.
 
அதேநேரம் ஊரில் நுழைந்து ஓட்டுகேட்கமுடியாத நிலையில் கானொலியில் பேசும் மாமன்னன்னில் பேச்சில் உணர்ச்சியோ மக்களை வசியபடுத்தும் வலிவோ இல்லை . மிக சாதாரணமாக உள்ளது
பன்றி மேய்ப்பவராக உதயநிதியின் பாத்திரம் சிறப்பு தனித்துவமானது . பன்றிக்குட்டியை வீட்டின் உள்ளே வைத்து வளர்ப்பது கொஞ்சுவது நம் ஊர் வழக்கமில்லை
 
நம்ம ஊரில் நாய்வேட்டைப்போட்டிதான் உண்டு
 
ஆனால் நாய் ஓட்டப்போட்டியில் தோற்கும் நாயை கொல்வது என்பது ஜல்லிக்கட்டு போட்டியை விமர்சிப்பது போல் உள்ளது.
 
சினிமா என்ற அளவில் படம் சிறப்பாக உள்ளது.
 
படம் பேசுவது என்ன?
 
அவ்வப்போது இருவண்ணக்கொடி கார்களில் பறக்கிறது திமுக கொடி போல உள்ளது
மாமன்னன் படம் முழுதுமே திமுக மற்றும் திராவிட இயக்கங்களை நேரடியாக விமர்சித்தே எடுக்கப்பட்டுள்ளது
 
முதல் அமைச்சர் முன்பு பெரியார் சிலை உள்ளது .அவருடைய மாவட்ட செயலாளர் சாதி ஆதிக்கவெறி பிடித்தவர் .
 
அதே கட்சியில் உள்ள மாமன்னன் வீட்டில் பெரியார் படமோ அண்ணா படமோ இல்லை அம்பேத்கர் புத்தர் படங்கள் மட்டுமே.
 
புத்தர் பட்டியலினத்தவர்களுக்கு என்ன தொண்டு செய்தார் என்பது நமக்கு விளங்கவில்லை
திராவிடர் இயக்கம் குறித்து ஆயிரம் விமர்சனங்கள் உண்டு .ஆனால் தலித் இயக்கங்கள் தடையின்றி செயல்பட இராஜபாட்டை தமிழ்நாட்டில் போட்டவர்கள் திராவிட இயக்கங்களே!
பெரியார் அறிவித்த சாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்பு போரில் பங்கேற்று 3000 க்கும் மேற்பட்டோர் இரண்டாண்டுகள் சிறைதண்டனை பெற்றனர் .
 
சட்ட எரிப்புப் போர் வீரர்களான பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோர் திருச்சி சிறைக்குள்ளேயே வீரமரணம் அடைந்தனர்
 
அந்த சாதி ஒழிப்பு போரில் பங்கேற்றவர்களில் 95 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் பட்டியலினத்தவர் அல்லாதவர்கள் என்பதே உண்மை
 
சாதி இந்துக்கள் அனைவரையும் சாதிவெறிபிடித்தவர்களாக சிறுவர்கள் என்றும் பாராமல் அடித்து கொலை செய்யும் மனிதாபிமானம் இல்லாத கொலைக்காரர்களாக படம் சித்தரிக்கிறது
திராவிட இயக்கத்தின் மாவட்ட செயலாளர்களும் முட்டாள்கள் அவர்களின் பிள்ளைகளும் அடிமுட்டாள் எனபதாகவும் காட்சி வருகிறது
 
கொலை என்று சொல்லக்கூடாது கொடூரமான கொலைக்காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது
படம் முழுக்க ஒற்றை மனிதனாக மாரி செல்வராஜ் காட்சி பிம்பமாக வந்து போகிறார்
 
உதயநிதியை நாயகனாக்கியதிலும் ஏதாவது குறியீடு இல்லாமலா இருக்கும்” – என்று அந்த விமர்சனத்தில் சித்தர் கா குறிப்பிட்டு உள்ளார்.

Related Posts