’13/13 லக்கி நன்’ நாயகி மேக்னா – பானுமதியின் 2.o வெர்ஷன்!
திரைப்பட இயக்குநர்களில் பெண்கள் குறைவு. அதுவும் நடிப்பு மற்றும் இயக்கம் இரண்டிலும் இறங்கியவர்கள் மிகக் குறைவு. தவிர இவற்றோடு இசையமைப்பாளராகவும் இருந்தவர் பழம்பெரும் நடிகை பானுமதி மட்டுமே.
அவருக்குப் பின்னால் இன்னொரு நாயகி படத்தை இயக்குவதுடன் இசை அமைப்பாளராகவும் உருவாகி இருக்கிறார். அவர் மேக்னா. இவர் இசை அமைத்து, இயக்கி நாயகியாக நடிக்கும் படம் “13/13 லக்கி நன்”.
இந்தப்படத்தின் இசைவெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் நடிகர் எஸ்வி சேகர், தம்பி ராமையா, நடிகர் நட்டி, தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குனர் கண்ணன், ஜெய்குமார், கலை இயக்குனர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் படத்தை பாராட்டி பேசினார்கள், இயக்குனர் தம்பி ராமையா பேசும்பொழுது “பல வருடங்களுக்குப்பிறகு தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகி படத்தின் இயக்குனராக , இசையமைப்பாளராக ,தயாரிப்பாளராக வருகிறார்.
அவரை நாம் வரவேற்கவேண்டும். திரைப்படத்துறையில் யார்வேண்டுமானாலும் உழைப்பும், திறமையும், அற்பணிப்பும் இருந்தால் ஜெயிக்கலாம்” என்றார்.
மேக்னா பேசும்பொழுது, “இந்தப்படம் திரில்லர்
படம் , மலேசியாவிலும், தமிழ் நாட்டிலும் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து இப்போது திரைக்கு வரவிருக்கிறது.
இது ஒரு ஹாரர் திரைப்படம், விரைவில் திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது” என்றார்.
பழம்பெரும் நடிகை பானுமதியின் 2.0 வெர்ஷன் மேக்னாவை வாழ்த்துவோம்!

