ஜப்பான் பன்னாட்டு திரைப்படவிழாவில் சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’!

ஜப்பான் பன்னாட்டு திரைப்படவிழாவில் சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’!

தேசிய விருது இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் யோகிபாபு, அறிமுக நாயகன் ஏகன் உள்ளிட்டோர் நடித்து வெளியாகி உள்ள கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெளியீட்டுக்கு முன்பே உலக திரைப்பட விழாக்களில் அங்கீகாரமும் பெற்றது. திரையரங்குகளில் வெளியான பிறகு, “உறவுகளின் மேன்மையை, அன்பைச் சொல்லும் திரைப்படம்” என அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் படத்துக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஜப்பானில் நடைபெற்ற 10 வது டாப் இண்டி திரைப்பட விருது எனும் பன்னாட்டு திரைப்பட விழாவில் கோழிப்பண்ணை செல்லதுரையில் நடித்த சத்யா தேவிக்கு சிறந்த நடிகை விருது கிடைத்துள்ளது.

மேலும் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் எனும் விருதுகளுக்கு நாமினேஷன் என்ற தகுதியை பெற்றுள்ளது.