வித்தியாசமான ‘கொட்டுக்காளி’ டிரெய்லர்! ரசிகர்கள் வரவேற்பு!

வித்தியாசமான ‘கொட்டுக்காளி’ டிரெய்லர்! ரசிகர்கள் வரவேற்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில், சூரி, அன்னா பென்  உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கொட்டுக்காளி’. இந்தப் படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு  வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

‘மூட நம்பிக்கை, ஆணாதிக்கம் மற்றும் சிக்கலான மனித உணர்வுகள் குறித்து இப்படம் பேசும்’ என படத்தின் இயக்குநர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. .

ட்ரெய்லர் எப்படி?: சூரி, அன்னா பென் என ட்ரெய்லரில் தோன்றும் அத்தனை கேரக்டர்களும் துவக்கம் முதல் கடைசி வரை, இறுக்கமான முகபாவனையில் உள்ளனர். ட்ரெய்லரில் ஒரே ஒருமுறை மட்டுமே வசனம் இடம்பெறுகிறது. மற்றபடி, காட்சியமைப்புகள் மட்டுமே பேசுகிறது.  ஆனாலும் டிரெய்லர் ரசிக்கவைக்கிறது. . குறிப்பாக, சேவலின் ஓசையுடன் பின்னணி இசையும் சேர்ந்து செய்யப்பட்டுள்ள எடிட்டிங் கூடுதலாக ஈர்க்கிறது.

Related Posts