விறுவிறுப்பான ‘கான் சிட்டி’: ஜூன் 26 அதிரடி ரிலீஸ்!

சென்னையில் நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில், படக்குழுவினர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

நடிகர் மதன் பேசும்போது, படத்தின் கதை மற்றும் நகைச்சுவை சிறப்பானது என்றும், பத்திரிகையாளர்கள் இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நடிகர் லல்லு, இயக்குநர் ஹரிஷின் கடின உழைப்பைப் பாராட்டியதுடன், இது ஒரு சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் என்று கூறினார்.

கலை இயக்குநர் ராஜ்கமல், படத்திற்கான செட் அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.

உடை வடிவமைப்பாளர் நவா, அர்ஜூன் தாஸ் மற்றும் வடிவுக்கரசி உள்ளிட்ட கலைஞர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

நடன இயக்குநர் சந்தோஷ், இயக்குநர் ஹரிஷின் நேர்மறையான அணுகுமுறை பாடல்களின் உருவாக்கத்தில் பெரிய பலமாக இருந்தது என்று குறிப்பிட்டார்.

எடிட்டர் அருள் மோசஸ், இந்தப் படம் அனைவரது வாழ்க்கையுடனும் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய கதையைக் கொண்டுள்ளது என்று கூறினார்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன், மிடில் கிளாஸ் பின்னணியிலிருந்து வந்து தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் உயர்ந்துள்ள ஹரிஷின் பயணத்தைப் பாராட்டி, அனைவரின் கூட்டுழைப்பால் படம் சிறப்பாக உருவாகியுள்ளது என்றார்.

பாடலாசிரியர் மோகன் ராஜன், அர்ஜூன் தாஸை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட இந்தக் கதை மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்றும், ஷான் ரோல்டன் மற்றும் ஹரிஷுடன் பணியாற்றியது சிறப்பானது என்றும் தெரிவித்தார்.

நடிகர் விடிவி கணேஷ், ஹரிஷின் தெளிவான திட்டமிடலைப் பாராட்டி, படம் ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நடிகர் அருள்தாஸ், படப்பிடிப்பு தளத்தில் நிலவிய தொழில்முறை அணுகுமுறை மற்றும் தன் கதாபாத்திரம் முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.

இமான் அண்ணாச்சி, ஒரு பவர்ஃபுல் எண்டர்டெயினராக இப்படம் அமையும் என்று வாழ்த்தினார்.

நடிகர் சதானந்த், தனது முதல் பட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு, படக்குழுவினர் தனக்கு அளித்த ஊக்கத்திற்கு நன்றி கூறினார்.

குழந்தை நட்சத்திரம் அகிலன், தனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தயாரிப்பாளர் சித்து நாயர், ஹரிஷின் கதையில் இருந்த ஆழமே தன்னை முதலீடு செய்யத் தூண்டியது என்றார்.

தயாரிப்பாளர் அருண் பிரஜித் மனோகரன், இந்தக் கதை அனைவரது வாழ்க்கையுடனும் தொடர்புடையது என்பதால் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

தயாரிப்பாளர் முத்துக்குமார் ஐயப்பன், படத்தின் தரம் தங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாகக் கூறினார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், ஹரிஷின் அர்ப்பணிப்பு மற்றும் அர்ஜூன் தாஸின் நேர்மை படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது என்றார். மேலும், மோகன் ராஜனுடன் இணைந்து உருவாக்கிய பாடல்கள் தனது இசைப் பயணத்தில் முக்கியமானவை என்று குறிப்பிட்டார்.

மேலும் பேசியவர்கள்…

வடிவுக்கரசி: “இயக்குநர் ஹரிஷின் நேர்மை எனக்குப் பிடித்திருந்தது. உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் கூட, படக்குழுவினர் என் மீது காட்டிய அக்கறையை மறக்க முடியாது. அர்ஜூன் தாஸின் அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது. படம் நிச்சயம் உங்களைக் கவரும்!”

யோகி பாபு: “ஹரிஷ் இயக்குநராக வேண்டும் என்று பல வருடங்களுக்கு முன்பே சொன்னவன் நான். இன்று அவர் வளர்ந்திருப்பதைக் காண்பது மகிழ்ச்சி. அர்ஜூன் தாஸுடன் நடிப்பது எப்போதும் ஜாலிதான். இது முழுக்க முழுக்க குடும்பத்தோடு ரசிக்க வேண்டிய படம்!”

அன்னா பென்: “இது எனக்குப் புதிய சவால். தமிழ் பேசக் கற்றுக்கொண்டிருக்கிறேன்! வடிவுக்கரசி மேம் மற்றும் யோகி பாபு சாருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். நான் முதல்முறை நடனமாடிய படமும் இதுதான்!”

அர்ஜூன் தாஸ்: “தயாரிப்பாளர்கள் படத்திற்காகச் செய்துள்ள புரமோஷன் வியக்க வைக்கிறது. ஹரிஷின் திட்டமிடல் அற்புதம். உணர்ச்சிகள், நகைச்சுவை என அனைத்தும் கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படம் ‘கான் சிட்டி’.”

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்: “என் கனவை நனவாக்க உதவிய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக என் மனைவிக்கு மிகப்பெரிய கடன் இருக்கிறேன். 55 நாட்களில் தரமான படத்தை உருவாக்கியிருக்கிறோம். ஜூன் 26 திரையரங்குகளில் சந்திப்போம்!”

 பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், கடனில் தவிக்கும் குடும்பத்திற்கு எதிர்பாராமல் கிடைக்கும் பணம் அச்சிடும் இயந்திரத்தைச் சுற்றி நடக்கும் விறுவிறுப்பான கதை. சென்னை, மும்பை எனப் பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஜூன் 26-ஆம் தேதி படம் வெளியாகிறது!

Related Posts