1020 தியேட்டர்களில் கொலை!
இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கொலை.
சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார்.
இன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் சிறப்புக் காட்சி செய்தியாளர்களுக்காக நேற்று திரையிடப்பட்டது.
ஒரு கொலை.. அதைத் தொடர்ந்து கொலைகள்.. கொலையாளி யார் என்கிற சஸ்பென்ஸ்.. இறுதியில் பிடிபடும் கொலைகாரன்..
இப்படியான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம், ஹாலிவுட் பாணியில் உருவாக்கப்பட்டு உள்ளது.
இயல்பான நடிப்பு, ஒளிப்பதிவு, இசை என அனைத்து அம்சங்களையும் சிறப்பாக ஒருங்கிணைத்து அசத்தலான க்ரைம் த்ரில்லரை அளித்துள்ளார் இயக்குநர்.
இத்திரைப்படம் இன்று உலகெங்கிலும் 1020 திரையரங்குகளில் வெளியாகிறது.

