சூரி, சமுத்திரகனி வாய்ஸ் ஓவரில் ‘கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை’ குறும்படம்!
செல்ரின் புரொடக்ஷன் சார்பாக திரு.செல்வம் பொன்னையன் தயாரிக்க, அஷ்வினி- மணிவண்ணன் தம்பதி இணைந்து எழுதி இயக்கியுள்ள குறும்படம், கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை.
இயக்குனர் சமுத்திரக்கனி மற்றும் நடிகர் சூரி ஆகியோர் தங்களது வாய்ஸ் ஓவர் கொடுத்து இக்குறும்படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளனர்.
இந்த குறும்படத்தின் ஓடிடி உரிமையை ஷார்ட் ஃபிலிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது.
குறும்படத்தை பற்றி இயக்குனர் அஷ்வினி மற்றும் மணிவண்ணன் கூறியதாவது:
“நாங்கள் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். யாரும் கெட்ட வார்த்தைகளை பேசக்கூடாது என்பதற்காக,கெட்ட வார்த்தையில் பேசி இந்த குறும்படத்தை உருவாக்கி உள்ளோம். காவாராயினும் நாகாக்க என்னும் திருக்குறளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படம் இது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் தா.முருகானந்தம், இமான் அண்ணாச்சி, விஜய் டிவி பவித்ரா, அட்ரஸ் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர் .
இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஜேசன் வில்லியம்ஸ், இசை அருணகிரி படத்தொகுப்பு ஷான் லோகேஷ் கலை இயக்குனர் என்.கே ராகுல் .
இப்படம் முழுக்க முழுக்க ஒரே நாள் சென்னை வளசரவாக்கத்தில் எடுத்து முடிக்கப்பட்டது” என்றார்கள்.
