கமலுக்கு ஜோடி? : நதியா பதில்
கோவையில் எல்.ஜி.எம் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு நதியா பதில் அளித்தார்.
“மணிப்பூர் சம்பவம் மனதை கலங்க வைக்கிறது. இதே நிகழ்வு நமக்கும் நடந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டும். அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை ஆனால், அரசியல் சார்ந்த படங்களில் நடிப்பேன் என்றார்.
“கமலுடன் சேர்ந்து நடிப்பீர்களா” என்று கேட்கப்பட்டதற்கு, “அவரும் சினிமாவில் நடிக்கிறார்.. நானும் நடிக்கிறேன். சேர்ந்து நடிக்க வாய்ப்பு ஏற்படலாம்” என்றார்.

