‘அன்பில் அவன்’ படத்தின்மெலடி மேஜிக்:  காதல் வலி பேசும் “கல்லா நிக்கிறியே” !

‘அன்பில் அவன்’ படத்தின்மெலடி மேஜிக்:  காதல் வலி பேசும் “கல்லா நிக்கிறியே” !

காதலின் ஆழமான வலியையும், காதலியின் அளப்பரிய பெருமையையும் நெஞ்சைத் தொடும் மெலடியில் பேசும் ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” வெளியாகி, ரசிகர்களின் இதயங்களை முழுமையாக ஆக்கிரமித்து வருகிறது!

இளம் நாயகன் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகிவரும் அழகான காதல் காவியம் ‘அன்பில் அவன்’. இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தாவின் ஆன்மாவைத் தொடும் இசையில், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் நெகிழ்வான வரிகளில், சித் ஸ்ரீராமின் தனித்துவமான குரலில் பிறந்துள்ள “கல்லா நிக்கிறியே” பாடல் இணையத்தைக் கலக்கி வருகிறது.

முன்னதாக வெளியான “ஆசை வரமே” பாடல் காதலின் இனிமையையும் நெருக்கத்தையும் அள்ளிக் கொடுத்த நிலையில், இந்த “கல்லா நிக்கிறியே” பாடல் காதலின் மறுபக்கமான பிரிவின் ஏக்கத்தையும், மெல்லிய வலியையும் மிக அழகாகப் பதிவு செய்கிறது. கார்த்திக் நேத்தாவின் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில், கோவிந்த் வஸந்தாவின் இசையும், சித் ஸ்ரீராமின் உணர்வுப்பூர்வமான ஆலாபனையும் கேட்போரை அப்படியே காதல் உலகிற்குள் கடத்திச் செல்கின்றன.

இசைக்கலைஞர்கள் கோவிந்த் வஸந்தா – சித் ஸ்ரீராம் இணையும் காட்சியமைப்புகளோடு, படத்தின் மென்மையான விஷுவல்களும் இணைந்துள்ளதால், இப்பாடலை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டுகிறது.

‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா கதையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது.

கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.கே. செல்வா படத்தொகுப்பையும், மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 25-ம் தேதி திரைக்கு வரத் தயாராகி வருகிறது!

Related Posts