சாதி வெறியைத் தூண்டாதீர்கள்! பேரரசு கண்டனம்!

சாதி வெறியைத் தூண்டாதீர்கள்! பேரரசு கண்டனம்!

சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ்,  தயாரிக்க, சலங்கை துரை  இயக்கத்தில், தாமோதர் விதிஷா  உள்ளிட்டோர் நடிக்கும் படம் கடத்தல்.

ஜூலை மாதம் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது, “எந்த பிரச்சனையை வேண்டுமானாலும் படத்தில் சொல்லலாம் நமது வலியைச் சொல்லலாம் ஆனால் அதை மக்கள் உணரும்படி சொல்ல வேண்டுமே தவிர சில பிரிவினருக்கு வலியைத் தரும்படி சொல்லக்கூடாது.

சினிமாவில் தாழ்த்தப்பட்டவன் என யாருமில்லை. ஜெயித்தவன் ஜெயிக்கப்போகிறவன் என இரண்டே ஜாதிதான் இருக்கிறது. உலகமே கொண்டாடும்  இசை மேதை ஜீனியஸ் இளையராஜாவின்  காலில் விழுந்து வணங்கவில்லையா..  சினிமாவில் ஜெயித்தவர் காலில் எல்லோரும் விழுவார்கள்.

என்னை அஸிடெண்டாக சேர்த்த போது, இராமநாராயணன்,  நான் என்ன ஜாதி என கேட்க வில்லை. விஜய் சார் வாய்ப்பு தந்தார் அவர் என்னிடம் கதை தான் கேட்டார் ஜாதி கேட்கவில்லை, தயாரிப்பாளர் சௌத்திரி சார் எனது ஜாதியைக் கேட்கவில்லை.

ஆனால் வாய்ப்பு கேட்டு வருகிறவனிடம் ஜாதி என்ன என கேட்பவன் இயக்குநரே இல்லை.

ஜாதிப்படம் வரட்டும் ஜாதிப்பெருமை பேசட்டும் ஆனால் அடுத்த ஜாதியைக் குறை சொல்லாதீர்கள்.

தேவர் மகன் ஜாதிப்பெருமை பேசிய படம் இல்லை… அது  தேவர் ஜாதிக்குள் நடந்த கதையைச் சொன்ன படம், உண்மையில் தேவர் ஜாதியினர் தான் அந்தப்படத்தைத் திட்ட வேண்டாம் ஏனெனில் அவர்களைக் காட்டுமிராண்டி கூட்டம் என்பார் கமல், சிவாஜி அதை மறுத்துப் பேசமாட்டார்

தவிர விரும்பத்தகாத பழைய சம்பவங்களை கதைகளாக்கி பிரச்சனை ஆக்காதீர்கள்” என்று  ஆவேசமாக பேசினார் பேரரசு.

Related Posts