காத்துவாக்குல ஒரு காதல்: திரை விமர்சனம்
வடசென்னை பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தும் ஜீவா, மேகாவை உருகி உருகிக் காதலிக்கிறார். அந்த ஏரியா தாதா ரத்னா. அவர், இளைஞர்களை வன்முறை பாதைக்குத் திருப்புகிறார். இதனால் ஜீவா ஆத்திரமாகி, ரத்னாவை எதிர்க்கிறார்.
இன்னொரு பக்கம், மேகாவுடனான காதல் தொடர்கிறது. அதில் பல எதிர்பாரா திருப்பங்கள்.
அவை என்னென்ன, இறுதியில் காதல் வென்றதா, ஏரியா தாதாவை நாயகன் ஒழித்தாரா என்பதே மீதிக்கதை.
நாயகன் மாஸ் ரவி இயல்பாக நடித்து இருக்கிறார். காதலிக்காக உருகும் காட்சிகளிலும், இறுதிக் காட்சியிலும் நெகிழ வைத்து விடுகிறார். தவிர, வில்லனை எதிர்த்து பேசும் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் அனல் பறக்கச் செய்கிறார்.
நாயகி லஷ்மி ப்ரியா அழகாக இருக்கிறார்.. அழகாக நடித்து இருக்கிறார். காதலின் வலிமையை தனது கண்களாலேயே வெளிப்படுத்துகிறார். பல காட்சிகளில் சோகத்தை வெளிப்படுத்த வேண்டி இருந்தாலும் அதை அழகாக செய்து இருக்கிறார்.
ஆதித்யா கதிர் மற்றும் தங்கதுரை இருவரின் காமெடி சில நேரங்களில் எடுபட்டு இருக்கிறது.
ராஜதுரை – சுபாஷ் மணியன் ஒளிப்பதிவும், ஜி.கே.வி. மற்றும் மிக்கின் அருள்தேவ் ஆகியோரின் இசையும் படத்துக்கு பலம்.
சூப்பர் சுப்பராயனின் சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கின்றது.
அழகான ஒரு காதல் கதையை இயக்கி நாயகனாகவும் நடித்து இருக்கிறார் மாஸ் ரவி. ஒரேநாளில் உருவாகி வளர்ந்து அன்றே கருகும் இந்த நாள் ஈசல் காதலைப்போல இன்றி, அந்தக் கால அமரக் காதலாக உருவாக்கி இருக்கி இருக்கிறார். அதே நேரம் நான் லீனியர் முறையில் சொன்ன விதத்தில் கொஞ்சம் குழப்பம் ஏற்படுகிறது. மற்றபடி ரசிக்கத்தக்க படம்.
