“அதை வெற்றி விழாவில் சொல்றேன்!”: ‘இருமுடி கட்டு’ குறித்து ட்விஸ்ட் வைத்த ரவி தேஜா!

“அதை வெற்றி விழாவில் சொல்றேன்!”:  ‘இருமுடி கட்டு’ குறித்து ட்விஸ்ட் வைத்த ரவி தேஜா!

‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில், மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் அதிரடியான பேச்சு மற்றும் படக்குழுவினரின் சுவாரஸ்யமான கருத்துகள்:

  • ரவி தேஜா (நாயகன்): “சென்னைக்கு வந்திருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு! இந்தப் படத்தோட தொழில்நுட்பக் குழுவினர் ஒவ்வொருத்தருக்கும் என்னுடைய பெரிய நன்றி. குறிப்பா ஜி.வி. பிரகாஷ்குமாரோட இசைதான் இந்த ‘இருமுடி கட்டு’ படத்தோட உண்மையான ஆன்மா! தெலுங்கில் இந்தப் படம் ஆல்ரெடி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடிச்சிருக்கு. இந்த படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் நட்சத்திராவுக்கு ரொம்ப பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கு, பிரியாவும் அவங்களோட கேரக்டரை ரொம்ப சிறப்பா பண்ணியிருக்காங்க. தயாரிப்பாளர்களின் முழு ஆதரவுக்கும் நன்றி! இயக்குநர் சிவாவை எனக்கு ரொம்பவே பிடிக்கும்… அது ஏன், எதற்குன்ற ரகசியத்தை நான் இப்பவே சொல்ல மாட்டேன், படத்தின் வெற்றி விழாவில் மேடையில வச்சே சொல்றேன்! எல்லாரும் தியேட்டர்ல படம் பார்த்துட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க!”

  • ஜி.வி. பிரகாஷ் குமார் (இசையமைப்பாளர்): “கதைதான் ஒரு படத்தோட அஸ்திவாரம். ‘பொல்லாதவன்’, ‘ராஜா ராணி’ கதையைக் கேட்டபோதே பிளாக்பஸ்டர் ஃபீல் வந்துச்சு. அதேபோலத்தான் இந்த கதையைக் கேட்டபோதும் தோணுச்சு. ‘பாட்ஷா’ ரஜினி சாருக்கு மாதிரி கமர்சியல் சினிமாவுல ரவி தேஜா சாருக்குன்னு ஒரு தனி ஸ்டைலும் தனித்துவமும் இருக்கு.”

  • சிவா நிர்வாணா (இயக்குநர்): “தமிழ் சினிமாவோட எனக்கு எப்பவுமே ஒரு உணர்வுப்பூர்வமான இணைப்பு உண்டு. பாரதிராஜா, பாக்யராஜ் படங்கள் பார்த்து வளர்ந்தவன். படம் முடிஞ்சு தியேட்டரை விட்டு வெளிய போகும்போது மனசுல ஒரு பெரிய தாக்கம் இருக்கணும். இந்தப் படம் பார்த்து முடிச்சதும் கண்டிப்பா உங்க மனைவி, மகளைப் பற்றி யோசிப்பீங்க!”

பிரியா பவானி சங்கர் (நாயகி): “ஒரு பெரிய மாஸ் ஹீரோவோட படம் என்றாலும், சொன்ன கதையை எந்த மாற்றமும் செய்யாம அப்படியே எடுத்துருக்காரு இயக்குநர். அப்பா – மகள் அன்பு இருக்குற எல்லா இடத்துலயும் இந்த படம் நிச்சயமா மிகப்பெரிய வெற்றி பெறும்!”

  • ரவி சங்கர் (தயாரிப்பாளர்): “திரில்லர், குடும்ப கதை, ஆன்மீகம்னு மூணு லேயர் உள்ள வித்தியாசமான கதை. இதை அந்த ஐயப்ப சுவாமியே தேர்வு செஞ்சு கொடுத்துருக்காருனு நம்புறோம்!”

Related Posts