’ஐபோன் 11’- குறைந்த விலையில்..! சென்னையில் தொடங்கியது ஆப்பிள் நிறுவனம்!
சென்னை: ஆப்பிள் நிறுவனத்தின் முன்னணி செல்போன் மாடல்களில் ஒன்றான ஐபோன் 11-ஐ சென்னையின் ஃபாக்ஸ்கான் ஆலையில் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆப்பிள் நிறுவனமானது இந்தியாவில் ஒரு முன்னணி மாடல் மின்னணு சாதனத்தை தயாரிப்பது இதுவே முதல் முறை. இந்த செய்தியை மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
’மேக் இன் இந்தியா திட்டத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தியாவில் ஐபோன் 11 ஐ தயாரிக்கத் தொடங்கியிருக்கிறது. நமது நாட்டில் முதல் முறையாக ஒரு சிறந்த மாடலை ஆப்பிள் தயாரிக்க உள்ளது. என்று பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே 2017ம் ஆண்டு பெங்களூரில் ஆப்பிள் ஐபோன் எஸ்கு வகை போன் உற்பத்தி ஆலையைத் தொடங்கியது. இதே பெங்களூரில் ஐபோன் தனது எக்ஸ்ஆர் வகை செல்போனை 2019ம் ஆண்டு இந்தியாவில் முதலில் தொடங்கியது. தற்போது இருக்கும் ஐபோன் 11 என்பது அந்த நிறுவனத்தின் மிகவும் விலைவுயர்ந்த போனாகும் என்பது குறிப்பிடதற்கது.
பெங்களூர் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் ஆப்பிள் நிறுவன கால் பதித்திருப்பது தொழில்துறைக்கான நல்ல மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் ஆப்பிள் அசெம்பிள் நிறுவனமானது இந்த மாத முதல் வாரத்தில் ஆப்பிள் நிறுவனத்திற்கான, முன்னணி சேவையான ஃபாக்ஸ்கான், இந்தியாவில் ஆலைகளை விரிவாக்கத்திற்கு 1 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபாக்ஸ்கான் சேவைக்கு அடுத்தபடியாக ஐபோனுக்கான, 2வது பெரிய சேவை நிறுவனம் அசெம்பிளரான பெகாட்ரான். இதுவும் இந்தியாவில் முதலீடு செய்யப் போவதாகவும், எதிர்காலத்தில் துணை நிறுவனத்தை அமைக்க அமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சென்னையில்,ஐபோன் 11 உற்பத்தியானது அதிகரிக்கப்பட்டு ஆப்பிள் இந்தியாவில் தயாரிக்கப்படும் போது’ உள்ளூர் உற்பத்தி காரணமாக 22% இறக்குமதி வரியை ஆப்பிள் மிச்சப்படுத்தும் என்பதால் எதிகாலத்தில் ஐபோன் 11 விலைகுறையும் என தெரிவிக்கின்றனர்.
எஸ்.யாழினி