எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் முதலும் கடைசியுமாக நடித்த திரைப்படம்!: இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு உருக்கம்
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌத்தரராஜன் இன்று காலமானார்.
இவர் நடித்த கட்டில் திரைப்படத்தின் இயக்குனர் அவரது மறைவு பற்றி கூறியதாவது.
இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் எழுதிய சிவம் நாவலை தனுஷ் இயக்கி நடிப்பதற்க்காக பேச்சு வார்த்தை நடந்ததை ஆர்வத்தோடு என்னிடம் சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.
சந்தானம் படங்களுக்கு அவரது வசனப்பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.நாகா இயக்கத்திற்காக அவர் எழுதிய ஆனந்தபுரத்துவீடு மற்றும் ருத்ரவீணை தொடர்களில் அவரோடு பயணித்தது மறக்க முடியாதது.
பல சமயங்களில் பல இயக்குனர்கள் திரைப்படத்தில் நடிக்க அழைத்தும் மறுத்த அவர் எனது நட்புக்காக எனது கட்டில் திரைப்படத்தில் மிகமுக்கிய வேடத்தில் நடித்தார். அவர் நடித்த முதலும் கடைசியுமான படமாக எனது திரைப்படம் அமைந்துவிட்டது.
இன்று அவரது மறைவுச்செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்
மீளா துயரில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை.
இவ்வாறு இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறினார்.