அறிமுகம் இல்லாத நபரின் ஆட்டோவில் கதாநாயகியை ஏற்றிவிட்ட அபிசரவணன் …!

டாக்டர் அசோக் தியாகராஜன் டைரக்ஷனில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாயநதி. பவதாரணி இசையமைத்துள்ள இந்தப்படம் வரும் ஜனவரி 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

படத்தின் நாயகன் அபி சரவணன். இந்த படம் குறித்தும் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் நம்மிடம் பல தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

இந்த படத்தில் எனக்கு ஆட்டோ ஓட்டுனர் கதாபாத்திரம் என்பதால் மதுரைக்கு சென்று அங்கே என்னுடைய பால்ய கால நண்பரான  ஆட்டோ மாரி என்பவரிடம் ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொண்டேன். ஆர்டிஓ அலுவலகத்தில் முறைப்படி ஆட்டோ ஓட்டுவதற்கு உரிமம் பெற்றேன். மதுரையிலேயே சுமார் 15 நாட்கள் ஆட்டோ ஓட்டிவிட்டு, இந்தக் கதையின் களமான மாயவரம் பகுதியிலும் சுமார் இருபது நாட்கள் ஆட்டோ ஓட்டினேன். அதிலேயே தினசரி ஆயிரம் ரூபாய் சம்பாதித்தேன். இப்படி ஆட்டோ ஒட்டிய சமயங்களில் பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களது பழக்கவழக்கங்கள், அன்றாட பிரச்சினைகள் என்ன என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள முடிந்தது.

படத்தின் கதாநாயகி மட்டுமல்ல, படத்திற்காக பயன்படுத்தப்பட்ட கேமரா உள்ளிட்ட விலைமதிப்பில்லாத பொருள்களையும் என்னை நம்பி ஆட்டோவில் பயணிக்க அனுப்பி வைத்தார்கள்.

சில காட்சிகளில் கேமராவை ஆட்டோவின் முன்பாக பொருத்தி விடுவார்கள். பின்னிருக்கையில் கதாநாயகி அமர்ந்திருக்கும் சில காட்சிகளை படமாக்கும்போது நான் இடைஞ்சலாக இருக்க கூடாது என்று ஆட்டோவின் கீழ்பகுதியில் அமர்ந்தபடியே ஆட்டோவை ஓட்டினேன். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஆளே இல்லாமல் ஒரு ஆட்டோ வருவது போன்ற குழப்பங்கள் ஏற்பட்ட சுவாரசியமான நிகழ்வுகள் எல்லாம் நடந்தது. அனுபவம் இருக்கும் ஓட்டுநரை அழைக்கலாம் என்றார்கள் மறுத்துவிட்டு நானே அந்த வேலையை செய்து முடித்தேன்.
ஒரு காட்சியின் போது என்னுடன் ஆட்டோவில் பயணிக்கும் நாயகி வெண்பாவை, எனது ஆட்டோ ரிப்பேர் ஆனதால் எதிரில் வரும் ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைக்க வேண்டும். மிக நீண்ட தொலைவில் கேமராக்கள் வைத்து எடுக்கப்பட்ட காட்சி இது. என்னுடைய ஆட்டோவிலும் ஒரு கேமரா வைக்கப்பட்டிருந்தது. வெண்பாவை இறக்கிவிட்டு அடுத்ததாக எதிரில் ஒரு ஆட்டோ வந்ததும் அதில் அவரை ஏற்றி அனுப்பி வைத்தேன். காட்சி முடிந்தது என நினைத்தால் அடுத்த சில நொடிகளிலேயே உதவி இயக்குனர்கள் சிலர் கூச்சலிட்டபடி அந்த ஆட்டோவை தொடர்ந்து ஓடினார்கள். என்னவென்று விசாரித்தபோது தான் நாங்கள் படப்பிடிப்பிற்காக ஏற்பாடு செய்திருந்த இன்னொரு ஆட்டோ சரியான சமயத்திற்கு வர தவறியதும் அந்த நேரத்தில் எதேச்சையாக அந்தப் பக்கம் படப்பிடிப்பு நடக்கும் விபரம் தெரியாமல் இன்னொரு ஆட்டோ வந்ததும் அதில் தவறுதலாக கதாநாயகியை ஏற்றிவிட்டேன்.  பின்னர் தான் தெரிந்தது இருந்தாலும் கதாநாயகி மீது இவ்வளவு கோபம் உனக்கு இருக்க கூடாது.. இப்படியா செய்வாய் என அன்று முழுவதும் என்னை படக்குழுவினர் அனைவரும் கிண்டலடித்ததும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்றார்..

Related Posts