‘ல்தகா சைஆ’ : விமர்சனம்

‘ல்தகா சைஆ’ : விமர்சனம்

நாயகன் கனவில் நடக்கும் சம்பவங்கள், நிஜத்திலேயே நடக்க ஆரம்பிக்கின்றன. இதனால் நாயகன் பதட்டமாகிறார். இந்த நிலையில், நாயகன் விபரீத சம்பவத்தில் சிக்குவது போல கனவு வருகிறது.. அதனால் இன்னும் பதட்டமடைகிறார்.. இறுதியில் என்ன நடக்கிறது என்பதே கதை.

தம்பதியினரான சதா நாடார் – மோனிகா சலினா தம்பதியே, திரையிலும் கணவன் மனைவியாக நடித்து உள்ளனர்.

படத்தை தயாரித்து இயக்கி நடித்து இருக்கிறார். செயற்கைான நடிப்பில் வதைக்கிறார். சதா நாடார் – சாதா. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

நாயகி மோனிகா கவர்கிறார். ஒரு ஹீரோயினுக்கான கவர்ச்சியோடு இருக்கிறார். நடிப்பிலும் முத்திரை பதிக்கிறார். காதல் கணவனிடம் காட்டும் பாசம், அவரது நிலை குறித்து அறியாமல் ஏற்படும் குழப்பம் என சிறப்பாக நடித்து உள்ளார். இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வரலாம்.

இதர கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் செயற்கையான நடிப்பையே அளித்து உள்ளனர்.

ஜான்சனின் இசை, எம்.எஸ். மோனோகுமாரின் ஒளிப்பதிவு ஓகே ரகம். படத்தொகுப்பாளர் பரணி செல்வம், இன்னும் கவனமாய் வெட்டித் தள்ளி இருக்கலாம்.

கனவில் நடப்பது நிஜத்திலும் நடப்பதாக பல படங்கள் வந்துள்ளன. பரவாயில்லை.. சொன்ன விதத்திலாவது புதுமையை புகுத்தி இருக்கலாம்.