‘பாய்’ படத்துக்கு எப்படி சென்சார் கொடுத்தார்கள்?: பேரரசு ஆச்சரியம்!

‘பாய்’ படத்துக்கு எப்படி சென்சார் கொடுத்தார்கள்?: பேரரசு ஆச்சரியம்!

கே ஆர் எஸ் ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரிக்க, கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கியுள்ள படம், பாய்.

ஆதவா ஈஸ்வரா –  நிகிஷா ஜோடியாக நடிக்க, வில்லனாக  தீரஜ் கெர் நடித்துள்ளார்.

 

படத்திற்கு  கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.எடிட்டிங் இத்ரிஸ்.

இப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இயக்குநர் பேரரசு பேசும் போது,

” பாய் என்று தலைப்பு வைத்து, அந்தப் படத்தை  எப்படி சென்சாருக்கு எடுத்துக் கொள்வார்கள் என்று நான் நினைத்திருந்தேன். ஒரு வழியாக சென்சார் முடிந்துள்ளது. அதற்காகப் பாராட்டுகிறேன்.

இந்த தலைப்பைத் தணிக்கைக்கு ஏற்று பிறகு தணிக்கை சான்றிதழ் கிடைத்திருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்தப் படம் சமூக நல்லிணக்கம் பேசும் படமாகத் தான் இருக்கும்.

 

இஸ்லாமியர்களை நாம் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒன்றுக்குள் ஒன்றாகத்தான் பழகுவோம். எல்லாருக்கும் ஒரு முஸ்லிம் நண்பர் இருப்பார்.   எங்கோ ஏதோ ஒரு இடத்தில் மதப் பிரச்சினை வந்தால் அதை அரசியலாக்கி விடுகிறார்கள்.

ஆனால் நாம் அப்படி  நினைப்பதில்லை.

 

படத்தில் மதம் ஒரு அரசியல் கருவி என்ற வசனம் வருகிறது. மதம் என்பது மனிதனுக்கு அடையாளம் அல்ல. மனிதாபிமானம் தான் மதம். மனிதாபிமானம் இருந்தால் எந்த மதமும் தேவையில்லை.

 

எந்த திரைப்படம் சமூக பிரச்சினையைச் சொல்கிறதோ அது சிறந்த படம் தான். மக்களுக்கு நல்ல விஷயத்தைச் சொல்வது சிறந்த படம் தான். அப்படிப் பார்க்கும் போது பாய் மிகச் சிறந்த படம்” என்றார்.

 

 

Related Posts