அதிரடி த்ரில்லர் மத்தகம் டீசர்!

அதிரடி த்ரில்லர் மத்தகம் டீசர்!

பிரசாந்த் முருகேசன்  இயக்கத்தில் அதர்வா முரளி மற்றும் மணிகண்டன் கதை நாயகர்களாக தோன்றும் வெப் சீரிஸ், மத்தகம்.

மேலும், கௌதம் வாசுதேவ் மேனன், நிகிலா விமல், திவ்யதர்ஷினி, இளவரசு, வடிவுக்கரசி, மூணார் ரமேஷ்  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.யானையின் நெற்றி பகுதியை தான் மத்தகம் என்று சொல்வார்கள். அதற்கு ஏற்றது போல் இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அதர்வா மற்றும் மணிகண்டன் இருவரின் முகத்திற்கு பின்னால் யானை இருப்பது போல் தான் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று டீசர் வெளியாகி இருக்கிறது.

டீசர் ஒரு இரவில் என்னவெல்லாம் நடக்கும் என்ற கேள்வியுடன் தொடங்குகிறது. முப்பது மணி நேரத்திற்குள் நடக்கும் விஷயங்களை மையமாகக் கொண்டு இந்த சீரிஸ் வெளியாக இருக்கிறது. இந்த 30 மணி நேரத்திற்குள் ஹீரோ மற்றும் வில்லனுக்கு இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் இதன் திரைக்கதை என்று சொல்கிறார்கள்.

பரபரப்பான இந்த சீரிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மொழிகளில்  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்  ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

மத்தகம் டீசர்

 

 

 

 

 

 

  

Related Posts