மனிதநேயர் சைதையாருக்கு இன்னொரு கவுரவம்! ’’போர்ப்ஸ்’’ இதழியல் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்பு!
ஏழை மாணவர்களுக்கு இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி அளிப்பது உட்பட, பல்வேறு சேவைகளை பல ஆண்டுகளாக செய்து வருபவர், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்கள்.
அவரது சேவையைப் பாரட்டி பல்வேறு விருதுகள், அங்கீகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த வரிசையில், நாளை ஒரு முக்கியமான நிகழ்வு நடக்க உள்ளது. ப்பு..
உலகப் புகழ் பெற்ற ‘போர்ப்ஸ்’ இதழியல் நிறுவனம், ‘இந்தியாவில் இணையற்ற கல்வி சேவகர்கள்’ என்ற இணைய தொடரை ஒளிபரப்பி வருகிறது.
பிரபலமான இந்நிகழ்ச்சியை இந்திய எழுத்தாளர் சேத்தன் பகத் தொகுத்து அளிக்கிறார்.
இத்தொடரின் நாளைய (05.06.2020 – வெள்ளிக்கிழமை) நிகழ்ச்சியில் இந்தியாவில் இணையற்ற கல்வி சேவகர்கள் நாற்பது பேரில் ஒருவராக மனிதநேயம் அறகட்டளையின் தலைவர் சைதை துரைசாமி கலந்துகொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியை www.forbesindia.com என்ற இணையதளத்தில் காணலாம்
எப்போதும், எந்த சூழலிலும் பிறருக்கு உதவும் கொள்கையுடன் வாழும் சைதையாரின் அனுபவங்கள், அறிவுரைகள் அனைவருக்கும் பயனுள்ளவை. அவசியம் காணுங்கள்.