“ ‘இடி முழக்கம்’ படத்தின் ‘அடி தேனி சந்தையில்..’ பாடலை ஊடக பெண்களுக்கு சமர்ப்பிக்கிறேன்!”: தேசிய விருது இயக்குநர் சீனு ராமசாமி நெகிழ்ச்சி!

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய, தேசிய விருது இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம்ஸ ‘இடி முழக்கம்.’
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நாயகனாக தோன்றுகிறார். காயத்ரி நாயகியாக நடிக்கிறார். சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் தோன்றுகின்றனர்.
என் ஆர் ரகுநந்தன் இசை அமைக்கிறார். ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டு இருக்கின்றன.
இந்த நிலையில், ‘அடி தேனி சந்தையில்..’ எனும் பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். பாடலை அந்தோணி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா ஆகியோர் பாடியுள்ளனர் பாடல்வரிகளை வரதன் எழுதியுள்ளார்.
இந்த பாடல் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதைத் தொடர்ந்து இயக்குநர் சீனு ராமசாமி, “ ‘அடி.. தேனி சந்தையில்..’ என்ற துள்ளல் இசை பாடலை தமிழ் உலக ஊடக வெளியில் பணிபுரியும் அறிவிப்பாளர்கள் ( RJ) உள்ளிட்ட ஊடக பெண்களுக்கு பெருமையோடு சமர்ப்பிக்கிறேன்.
“ஆழகான பொண்ணு தான் அதுக்கேத்த கண்ணு தான்” என டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணன் அம்மையார் அவர்களின் பாடலுக்குப் பிறகு பெண்களின் மேன்மை, உன்னதம் பேசும் முதல் குத்து பாடல் ( ஆயிட்டம் சாங் ) என்ற பெருமையை இடிமுழக்கம் படத்தின் ‘அடி தேனி சந்தையில்’ என்ற பாடல் பெறுகிறது. மக்கள் ஆதரிக்க வேண்டுகிறேன். வாழ்த்தி
மகிழ்கிறேன்” என்று இயக்குநர் சீனு ராமசாமி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
அந்த பாடல்…