ஹாலிவுட்டில் களமிறங்கும் ஜி.வி பிரகாஷ்

மிழ் திரையுலகில் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென்று ஓர் இடத்தை பிடித்து வைத்திருக்கும்  நடிகர் நெப்போலியன்  முதல்முறையாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் சிறந்த இசையமைப்பாளருமான  ஜீ வி பிரகாஷ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் ஒரு ஆங்கில படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்துக்கு ட்ராப் சிட்டி (Trap City) என பெயர் சூட்டி உள்ளார்கள்.

சர்வதேச தரத்தில் இருக்கும்  இப்படத்தை கைபா பிலிம்ஸ் நாசிக் ராவ் மீடியா மற்றும்  கிங்டம் ஓவர் ஏவரிதிங்  என மூன்று சிறந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படத்தில்,  ஜிவி பிரகாஷ் மற்றும் நெப்போலியன் உடன் சேர்ந்து டிராபிக் தண்டர் பர்சி ஜாக்சன் மற்றும் பிக் மாமா ஹவுஸ் போன்ற பிரபலமான ஆங்கில படங்களில் நடித்துள்ள பிராண்டன் டி ஜாக்சனும் நடித்துள்ளார்.

ரிக்கி பிற்செள்  இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.  பிராண்டன் ஜாக்சனை தவிர டெட் பிரஸிடெண்ட்ஸ் நோர்பிட் போன்ற பிரபலமான படங்களில் நடித்த கிலிப்டன்மற்றும் எரிகா பின்கெட்டும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஏழ்மையில் வாடும் ஒரு ராப் பாடகனின் கதைதான் ட்ராப் சிட்டி. இந்த பாடகன், வறுமையின் காரணமாக ஒரு போதைப்பொருள் கும்பலின் தலைவனிடம் வேலைக்கு சேர்கிறான்.  வேலைக்கு சேர்ந்தபின் , அவன் எழுதிய ஒரு பாடல் உலகெங்கும் பிரபலமாகிறது. ஆனால், துரதிஸ்டவசமாக, அவன் பாடல் பிரபலமாகும் போது அவன் கைது செய்யப்படுகிறான். அவன் குற்றத்தின் நிமித்தம் அவன் புகழும் பரவுகிறது. இப்படி இருக்க, அவனை கொல்ல ஒரு முயற்சி நடக்கிறது. அதன்பின் அந்த பாடகன் என்ன செய்கிறான் என்பதுதான் கதை.

இந்த சுவாரசியமான கதை அமெரிக்காவில் உள்ள நேஷவில் என்னுமிடத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது.
கைபா பிலிம்ஸ்:
இந்த பட நிறுவனம் டெல் K கணேசன் மற்றும் ஜி பி திமோதியோஸ் என்பவர்களால் மிச்சிகன் நகரில் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் தரமான  திரைப்படங்கள் மற்றும் ஆவணப் படங்களை தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது. லியாம் நீசன் நடித்து வெளிவர இருக்கும் தி மினிட் மேன் படத்தை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ,நேபாளம், பூட்டான் , ஸ்ரீலங்கா, மற்றும் மாலத்தீவுகள் போன்ற நாடுகளில் வெளியிடப் போவது இந்த கைபா நிறுவனமே என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்துக்கு ட்ராப் சிட்டி  என பெயர் சூட்டி உள்ளார்கள்.

படப்பிடிப்பு முடிந்து படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள். ட்ராப் சிட்டி இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts